கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழா

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 2017 இற்கான வருடாந்த விளையாட்டு விழா 16 மற்றும் 17 பங்குனி 2017 இல் தியகமவிலுள்ள மகிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கில் நடந்தேறியது.
முதலாம் நிகழ்வு ஒலிப்பிக் தீபமேற்றலுடன் ஆரம்பமானது. புpரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் இந்துனில் ரணசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பிரதி உபவேந்தர் (கல்வி;) சிரேஸ்ர பேராசிரியர் ஜயந்த ஆரியரத்ன, தெற்கு வழாக முதல்வர் ஏ. எஸ் ஆரியசிங்க, பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், கல்வியலாளர்கள் மாணவர்கள் என்பவர்களின் பங்குபற்றலுடன் முதல்நாள் நிகழ்வு நடந்தேறியது.
இரண்டாம் நாள் உபவேந்தர் துணைக் கடற்படைத்தளபதி ஜே ஜே ரணசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இறுதி நிகழ்வுகளாக பரிசளிப்பும் இடம்பெற்றது. வுpளையாட்டு விழா சம்பிரதாபூர்வமாக உபவேந்தரினால் நிறைவு செய்யப்பட்டது.
பல்கலைக்கழக விளையாட்டில் ஐந்து புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன
1. ஊஃடுஃஊpட நிது லிங்கா- பராக்கிரம அணி- 3000 மீட்டர்- பெண்கள் நிகழ்வு.
2. நாள்வரவு மாணவி யு ஐ நிலாவீர ஹெமுனு அணி 100 மீட்டர் தடைதாண்டி ஓட்டம் பெண்கள் நிகழ்வு
3. ஊஃளுபவ Nஆர் சேனாரத்- பராக்கிரம அணி- 400 மீட்டர்- ஆண்கள் நிகழ்வு
4. நாள்வரவு மாணவர் றுளு சானுக- விஜயபாகு அணி- 400 மீட்டர்- ஆண்கள் நிகழ்வு.
5. நாள்வரவு மாணவர் றுளு சானுக- விஜயபாகு அணி- 200 மீட்டர்- ஆண்கள் நிகழ்வு.
ஆறு அணிகளுள்ளும் விஜயபாகு அணி 405 புள்ளிகளைப் பெற்று 2017 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. மகாசேனன் அணி 290 புள்ளிகiயும் , பராக்கிரமபாகு மற்றும் வல்லகம்பா அணிகள் தலா 225 புள்ளிகளையும் பெற்று இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றன. நாள்வரவு மாணவர் றுளு சானுகவும் நாள்வரவு மாணவி யு ஐ நிலாவீரவும் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண் மற்றும் பெண் வீர பட்டங்களைச் சுவீகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *