DN-17249-13-ADMIRAL-DAYA-SANDAGIRI

வேந்தர்

அட்மிரல் தயா சந்தகிரி, RSP, VSV, USP, rcds, psc, 
எம்.எஸ்சி. (DS), FIMgt(ஐக்.இராச்.), MNI(இலண்டன்), MRIN(இலண்டன்),
சமாதான நீதவான் (இலங்கை)

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 4 ஆவது வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி அவர்கள் 2015 நவம்பர் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், கொ.பா.ப. இன் வேந்தர் பதவியை வகிக்கும் கடற் படையைச் சேர்ந்த முதலாவது உத்தியோகத்தராகவும் கருதப்படுகின்றார்.

அட்மிரல் தயா சந்தகிரி அவர்கள், திருகோணமலையிலுள்ள கீர்த்திவாய்ந்த கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் கடற்படை பயிலிளவல்களின் முதலாவது அணி மூலமாக 1969 யூலை 1 ஆம் திகதி இணைந்து கொண்டதுடன், நிறைவேற்றுக் கிளையில் உதவி லெப்டினன்டாக 1973 யூலை 1 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அட்மிரல் சந்தகிரி அவர்கள், தனது மேன்மைமிக்க, கௌரவமான மற்றும் கரைபடாத கடற் படைசார் சேவையில் முதன்மை நிலைகள் பலவற்றை அடைந்து கொண்டுள்ளார். இளம் உத்தியோகத்தராக இவர் தனது விசேட பயிற்சியை 1973 இல் இந்தியக் கடற் படையில் பயின்றார். கடற் படையின் பீராங்கிப் படைப் பிரிவில் அவரது மிகச் சிறந்த செயற்சாதனைகளுக்காக கடற் படைத் தளபதியிடமிருந்து முதலாவது உத்தியோகபூர்வ பாராட்டுதலை அவர் பெற்றுக்கொண்டார்.

அட்மிரல் சந்தகிரி அவர்கள், 1984 இல் இந்தியாவிலுள்ள பாதுகாப்பு சேவைகள் பதவிநிலை கல்லூரியில் தனது முதனிலை பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் மதுரை பல்கலைக்கழகத்தில் அவரது விஞ்ஞான முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1996 இல் ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற பாதுகாப்புக் கற்கைகள் சார் றோயல் கல்லூரியில் பட்டமேற்படிப்புக் கற்கையை பயிலுவதற்கு பங்குபற்றிய கடற் படையின் முதலாவது உத்தியோகத்தர் இவராவார்.  இவர், 1985 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் முறையே ஏவுநர் மற்றும் கப்டன் பதவி நிலைகளுக்கு பதவி உயர்த்தப்பட்டார். இவர், 1992 இல் ஒரு நட்சத்திர கொமதோர் நிலையைப் பெற்றுக்கொண்டதுடன், 1996 இல் ரியர் அட்மிரல் நிலையை அடைந்தார். இவர், 2001 இல் வைஸ் அட்மிரல் நிலையை அடைந்ததுடன். 2005 இல் நான்கு நட்சத்திர அட்மிரல் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

அட்மிரல் சந்தகிரி அவர்கள், 1966 நவம்பர் மாதம்14ஆம் திகதி, அப்போதய றோயல் இலங்கை கடற்படையின் நிரந்தர படைப்பிரிவில் நியமனம் பெற்ற கடற் படை வீரரொருவர் என்பதுடன், கடற் படையினது தளபதியாக கடமை வகிப்பதற்கு அதிகூடிய அனுபவத்தை கொண்ட நபராக விளங்கினார். அதனைத் தொடர்ந்து அவர், பாதுகாப்பு பதவிநிலை தலைவராக இராணுவத்தின் அதியுயர் பதவியை பெற்றுக்கொண்டார்.  39 வருடங்களும் 7 மாதங்களும் கொண்ட மிகச் சிறந்த சேவைக் காலத்துடன், 2006 யூன் மாதம் 12 ஆம் திகதி ஓய்வுபெற்ற இவர், நாட்டின் கடற்படை வரலாற்றிலே மிக நீண்ட காலம் சேவையாற்றியவருமாவார்.

2004 ஆண்டில் சுனாமி அனர்த்தம் நாட்டில் ஏற்பட்டபோது பாதுகாப்பு பதவிநிலை தலைவரான அட்மிரல் சந்தகிரி அவர்களது அதியுன்னதமான சேவைக்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், அப்போதய சனாதிபதி மேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் மிகவும் பாராட்டப்பட்டார். போரின் உச்ச கட்டத்தில் எதிரியின் எதிரே மிகச் சிறந்த வீரத்தை வெளிப்படுத்தியமைக்காக அவருக்கு ரண சூர பதக்கம் (Rana Sura Padakkama) விருது வழங்கப்பட்டது.

 

1947 செப்ரெம்பர் 1 ஆம் திகதி பிறந்த இவர், வியாங்கொடை புனித மரியாள் கல்லூரி மற்றும் கேகாலையிலுள்ள கேகாலை மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். இவர் வாசித்தல், கடல்சார் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்பம் சார் கற்கை, சமூகப் பணிகள் மற்றும் சமய நலப் பணிகளில் ஈடுபடுதல் ஆகியவற்றில் தனது காலத்தை செலவிடுவார். அட்மிரல் சந்தகிரி அவர்களின் துணைவி பர்ள் அம்மையார் ஆவார். இவர், சகல பணிகளிலும் தனது கணவருக்கு பக்க பலமாகவும் ஆதரவாகவும் இருந்து வருவதுடன், இலங்கை கடற்படை சேவா வணிதா பிரிவில் ஈடுபாடுமிக்க அங்கத்தவரான இவர், அது சார்பாக 25 வருடத்திற்கும் மேற்பட்ட காலம் தனது பெறுமதிமிக்க சேவையை வழங்கியுள்ளார். இவர்களுக்கு யசிறு மற்றும் சதுர எனும் புதல்வர்கள் இருவர் உள்ளனர்.

கல்விசார் அடைவுகள்

 • இந்தியாவிலுள்ள பாதுகாப்பு சேவைகள் பதவிநிலை கல்லூரியில் பட்டதாரி பட்டத்தைப் பெற்றுள்ளார்.
 • மதுரை பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.
 • ஐக்கிய இராச்சியத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற பாதுகாப்புக் கற்கைகள் சார் றோயல் கல்லூரியில் பட்டமேற்படிப்புக்காக பங்குபற்றியுள்ளார்.
 • உலகம் முழுவதும் இருக்கும் மிகச் சிறந்த முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் சார் திறன்களைக் கொண்ட ஆளுமையுடையோர்களை அங்கீகரிக்கும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பட்டய முகாமைத்துவ நிறுவகத்தின் தோழமை அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 • இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 • இராணுவ, கடற்படை மற்றும் கடல்சார் உபாயங்கள் சம்பந்தமாக உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மூலம் நடாத்தப்படும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் பலவற்றில் நாட்டையும் பாதுகாப்பு பதவிநிலை தலைவர் பதவியையும் மற்றும் இலங்கை கடற் படையையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
 • ஐக்கிய அமெரிக்காவிலுள்ள உலகப் பிரசித்தம் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் ஜோன் எப். கென்னடி அரசாங்க பாடசாலையில், சர்வதேச பாதுகாப்புசார் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கத்தவர்களுக்கு உரைநிகழ்த்தும்   அரிதான கௌரவத்தையும் சிறப்புரிமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

 

விருதுகள் மற்றும் அணிகலன்கள்

 • விஷிஸ்ட சேவா விபூஷனய,
 • உத்தம சேவா பதக்கம்,
 • இலங்கை குடியரசு ஆயுதப் படைச் சேவைப் பதக்கம்,
 • இலங்கை ஆயுதப்படைகளில் நீண்டகால சேவைப் பதக்கம் மற்றும் சின்னம்,
 • சனாதிபதியினது ஆரம்பத்திற்கான பதக்கம்,
 • இலங்கை கடற் படையின் 50 ஆவது ஆண்டு பதக்கம் மற்றும் சின்னம்,
 • 50 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா நினைவுப் பதக்கம்,
 • வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் மற்றும் சின்னம்,
 • பூர்ண பூமி பதக்கம், வடமாராட்சி நடவடிக்கை பதக்கம்,
 • ரிவிரச நடவடிக்கை சேவை பதக்கம்.

 

வகித்த பதவிகள்

 • அத்தியாவசிமான சந்தர்ப்பங்களில் இலங்கை கப்பற் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கப்பல்களில் சேவையாற்றி, மாலுமியாக நாட்டுக்கு அவரது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
 • கட்டளையிடல் அதிகாரி மற்றும் கண்காணிப்பு ஏவல் ஸ்குவாட்றன் கமாண்டர் – SLNS விக்ரம.
 • கடற்படை தலைமையகத்தின் கடற் படை நடவடிக்கைகள் சார் பணிப்பாளர்.
 • மேற்கு பிராந்திய கடற் படை கமாண்டர்.
 • தென் பிராந்திய கடற் படை கமாண்டர்.
 • கிழக்கு பிராந்திய கடற் படை கமாண்டர்.
 • வட பிராந்திய கடற் படை கமாண்டர்.

 

வகித்த ஏனைய மேலதிக பதவிகள் மற்றும் தேசத்திற்கு வழங்கியுள்ள பங்களிப்புக்கள்

 • இலங்கை கடற் படை பௌத்த சங்கத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
 • தேவநம்பியதிஸ்ஸ மன்னரால் “ஜய ஸ்ரீ மகா போதி” புனித மரக்கன்று பெற்றுக் கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்திலுள்ள தம்பகொளபட்டுன எனும் இடத்தில் வரலாற்று ரீதியான விகாரையை நிர்மாணிப்பதற்காக முன்நின்று செயலாற்றியுள்ளார்.
 • 2003 இல் வரலாற்று புகழ்மிக்க திரியாய விகாரையில் பௌத்த வழிபாட்டுத்தளம் மற்றும் யாத்திரிகர்களுக்கான ஓய்வுவிடுதியுடன் வசதிகளை அளிப்பதற்கான கட்டடம் ஆகியவற்றை நிர்மாணித்துள்ளார்.
 • இலங்கை கடற் படை விளையாட்டுத்துறை சபை மற்றும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுத்துறை சபை என்பவற்றின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
 • இலங்கை கடற் படை மற்றும் பாதுகாப்பு சேவைகளின் விளையாட்டுத்துறை முன்னேற்றம் சார் ஆலோசனை தொடர்பாக தீர்மானமிக்க பாத்திரத்தை வகித்துள்ளார்.
 • இலங்கை பாதுகாப்புச் சேவைகளை, CISM என பிரபல்யம் பெற்ற உலக இராணுவ விளையாட்டுத்துறை அமைப்புடன் ஒருங்கிணைக்கும் சிறப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
 • இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் தொடர்பான தேசிய கரப்பந்து விளையாட்டு சம்மேளனத்தின் சிரேஷ்ட உப தலைவராக பணியாற்றியுள்ளார்.
 • தேசிய கூடைப்பந்து விளையாட்டு சம்மேளனத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.