uni

 

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது (கொ.பா.ப), 1981ஆம் ஆண்டின் 68ஆம் இலக்க சட்டத்தினால் ‘ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கலைக்கழகம் என முதலில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், பின்னர் இது, 1988ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு தரமுயர்த்தப்பட்டு, இதற்கு பாதுகாப்புக் கற்கைகள் தொடர்பான இளமாணி மற்றும் பட்டமேற்படிப்பு பட்டங்களை வழங்கும் ஆற்றலும் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

கொ.பா. பல்கலைக்கழகமானது, பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் (ஐக்கிய இராச்சியம்) உறுப்புரிமையை பெற்றுள்ளதுடன், நவீன பாதுகாப்பு சார் முகாமைத்துவ சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாக அலுவலர் பயிலிளவல்களுக்கு கல்வியை வழங்குதல் மற்றும் தயார்படுத்துதல் என்பவற்றுக்குத் தேவையான தர நியமங்களை பேணிச்செல்கின்றது.

கொ.பா.ப. தற்போது பொறியியல், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகிய துறைகள் தொடர்பாக அவர்களின் உயர் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள விரும்பும் சிவில் மாணவர்களுக்காகவும் திறந்து விடப்பட்டுள்ளது.

கீர்த்திமிக்க பல்கலைக்கழகங்களில்/நிறுவகங்களில் அதிசிறப்பான சாதனைகளை கொண்ட உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் சம்பந்தப்படுகின்ற படையணியின் தேவைகளுக்கு ஏற்ப பட்டமேற்படிப்பு கற்கைச் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். சிவில் தொழில்வாண்மையாளர்கள் அவர்களின் முன்னேற்றம் கருதி பட்டமேற்படிப்புக் கற்கைகளில் ஈடுபடுவதற்கும், அவர்களுடன் தொடர்புபட்ட விசேட நிபுணத்துவம் சார்ந்த துறைகளில் பட்டமேற்படிப்பினை பயிலுவதற்கும் முடியும்.