vc

ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்ஹ, USP, psc
எம்.எஸ்சி. (DS) முகாமை., MmaritimePol (அவுஸ்), CPS பற்றிய பட்டப்பின்படிப்பு திப்ளோ.,
CR பற்றிய திப்ளோ., AFNI (இலண்டன்), சமாதான நீதவான் (முழுத் தீவுப்பகுதிக்கும்)

ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்ஹ அவர்கள், 1984 இல் பயிலிளவல் அலுவலராக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டதுடன், அவருடைய தலைசிறந்த மற்றும் கலங்கமற்ற சேவையின் மூலமாக அவருக்கு ரியர் அட்மிரல் நிலை வரை பதவி உயர்வு பெற்றுக்கொள்ளமுடிந்ததுடன், அவருக்கு “உத்தம சேவா பதக்கம்” வழங்கப்பட்டு கௌரவிப்பு செய்யப்பட்டுள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தற்போதய உப வேந்தர் இவரேயாகும். இவர் தனது ஆரம்ப உதவி லெப்டினன்ட் பாடநெறியை 1986 இல் பாகிஸ்தான் கடற் படையின் மூலம் PNS கர்ஸஸ், PNS மெஹெரான் மற்றும் PNS பஹதூர் என்பவற்றில் பயின்றார். இவர் பாகிஸ்தான், இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் வங்காளாதேசம் ஆகிய நாடுகளில் உயர் கடற் படை பயிற்சிகளை பெற்றுக்கொண்டார். மேலும், இந்தியாவிலுள்ள INS வென்டூர்தி மூலம் நீர்மூழ்கிக்கப்பலுக்கு எதிரான போர் முறை மற்றும் சண்டியாகோவிலுள்ள கொரனாடோ நீர் மற்றும் தரை சார் முகாமில் சமுத்திர ஆய்வு பிரிவில் நீர் மற்றும் தரை சார்ந்த போர் பற்றிய நிபுணத்துவத்தை பெற்றுக்கொண்டார். இவர், அவுஸ்திரேலியாவிலுள்ள வொலன்கொங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் சட்டம் மற்றும் கொள்கை தொடர்பான முதுமாணி பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், இலங்கையில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முகாமைத்துவம் சார் முதுமாணி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். மேலும் இவர், இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தில் முரண்பாடுகள் மற்றும் சமாதானக் கற்கைகள் சார் பட்டப்பின்படிப்பு திப்ளோமா பாடநெறியை அதிசிறப்பு சித்தியுடன் பூர்த்திசெய்தார்.

முக்கிய திறன்கள் மற்றும் அடைவுகள்

தனிப்பட்டவை

  • அவுஸ்திரேலியாவிலுள்ள வொலன்கோங் பல்கலைக்கழகத்தில் கடல்சார் சட்டம் மற்றும் கொள்கை தொடர்பான முதுமாணி பட்டம் பெற்றுள்ளமை.
  • ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவம் சார் முதுமாணி பட்டம் பெற்றுள்ளமை.
  • கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சமாதான பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து மூலம் சமாதானம் மற்றும் முரண்பாடுகள் சார் கற்கைகள் பற்றிய பட்டப்பின்படிப்பு திப்ளோமா பாடநெறியில் அதி சிறப்பு சித்தியை பெற்றுள்ளமை.
  • இலங்கையில் மாகொல, இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் பட்டதாரி பட்டம் பெற்றுள்ளமை.
  • ஐக்கிய நாடுகளின் சமாதான பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச கற்கைகள் தொடர்பான பண்டாரநாயக்க நிலையம் ஆகியவற்றின் மூலம் நடாத்தப்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பான திப்ளோமா சான்றிதழ் பெற்றுள்ளமை.
  • நீதி அமைச்சின் மூலம் முழுத் தீவுப்பகுதிக்குமான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளமை.

வகித்துள்ள பதவிகள்

  • கட்டளையிடல் உத்தியோகத்தர், அதிவேக தாக்குதல் படகு P 463.
  • ஏவுநர் உத்தியோகத்தர், கரையோரத்துக்கப்பாலுள்ள கப்பல் SLNS பராக்கிரமபாகு.
  • ஏவுநர் உத்தியோகத்தர், தரையிறக்கல் படகு “SLNS ரணகஜா”.
  • ஏவுநர் உத்தியோகத்தர், அதிவேக பீரங்கி படகு “ஜகதா”.
  • பயிற்சியளித்தல் கப்டன், கடற்படை மற்றும் கடல்சார் அகடமி.
  • பிரதம போதனாசிரியர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி.
  • கடற்படை பயிற்சியளித்தல் பணிப்பாளர், இலங்கை கடற் படை.
  • கடற்படை கொள்கை திட்டமிடல் பணிப்பாளர்.
  • கமாண்டர், தென் கிழக்கு கடற்படை பிராந்தியம்.
  • கமாண்டர், தெற்கு கடற்படை பிராந்தியம்.

பயிற்சிகள்

1986 – 1987:   உதவி லெப்டினன்ட்களுக்கான தொழில்நுட்ப பாடநெறி (பாகிஸ்தான் கடற்படை, கராச்சி, பாகிஸ்தான்).

1993 – 1994:      நீர்மமூழ்கிக்கப்பலுக்கு எதிரான மற்றும் நீரடி ஒலி சார் விசேட பாடநெறி

(இந்தியக் கடற்படை ASW பாடசாலை, கொச்சின், இந்தியா).

2004            :      சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான நீர் தரை சார் திட்டமிடல்

                          பாடநெறியைப் பூர்த்தி செய்தல் – சண் டியாகோ, ஐ.அமெ.

2005            :     இந்தியாவிலுள்ள போர் கல்லூரி MHOW இல் உயர் பாதுகாப்பு

                          திசைமுகப்படுத்தல் பாடநெறியை பூர்த்திசெய்தல்.

 2007           :      இராஜதந்திர மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய சான்றிதழ் பாடநெறியை

                          பூர்த்திசெய்தல்.

ஆய்வுகள் மற்றும் பிரசுரங்கள்:

உத்தியோகத்தாரால் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் /சிறிய நூல்கள், கல்விசார் பத்திரங்கள்

  • இலங்கையின் கரையோர கடல்ரோந்து சம்பந்தமாக அதிவேக தாக்குதல் படகுகளின் பயனுறுதி (பதவிநிலை கல்லூரி பட்டமளிப்பு சம்பந்தமான ஆராய்ச்சிப் பத்திரம் – 2003).
  • இந்திய மீனவர்கள் இலங்கைக்கு உரித்தான கடல் பகுதியினுள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உபாயவழிகள் (முகாமைத்துவம்சார் எம்.எஸ்சி. பட்டத்திற்கான தேவைப்பாட்டின் பகுதியை பூர்த்தியாக்க சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சி பத்திரம் – 2008).
  • பதவி உயர்வுகளின் போது சிரேஷ்ட நிலையை விட திறமைக்கு முதலிடம் அளித்தல் – வேலைத் தளத்தில் எழக்கூடிய முரண்பாடுகள் (இலங்கையின் கற்கைகள் சார் 12 ஆவது சர்வதேச மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் – 2010 மார்ச்).
  • சேது சமுத்திர திட்டம் உருவாக்கல் மூலமான முரண்பாடு – சமாதான பல்கலைக்கழகம் மற்றும் BCIS என்பவற்றில் முரண்பாடுகளை தீர்ப்பது சம்பந்தமான திப்ளோமா பாடநெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம்).
  • அந்தங்களை இணைத்தல் – இலங்கையில் இராணுவத்தினர் மூலம் போருக்குப் பிந்திய தொழிற்பாடுகள் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல் (2010 இல் கொ.பா.ப. ஆய்வு மாநாட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் பல்கலைக்கழக பாதுகாப்புசார் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட பத்திரம்).
  • தீவுகள் மற்றும் எல்லை முனைகளால் எழக்கூடிய சமுத்திரம் சார் முரண்பாடுகளை தடுப்பதற்காக இந்தியா பிராந்தியத்தினுள் உபாயவழி கூட்டமைப்பு (இப் பத்திரம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2011 ஆண்டு ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், இது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பாதுகாப்புசார் சஞ்சிகை மற்றும் 2011 செப்ரெம்பர் மாத ‘Business Today’ சஞ்சிகை என்பவற்றிலும் பிரசுரிக்கப்பட்டது.
  • நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்புதல்: இனம்சார்ந்த சம்பந்தங்கள், வலுவாதார மாதிரி கிராமம் என்பவற்றை திட்டமிடல் பற்றிய விடய ஆய்வு (2012 இல் கொ.பா.ப. ஆய்வு மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் பிரசுரிக்கப்பட்ட பத்திரம்).
  • ஆட்கடத்தல் தொடர்பான சர்வதேச சட்ட திட்ட வரம்புகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பந்தமான நவீன சந்தர்ப்பங்களுக்கு எதிராக போரிடுவதற்கு அதற்குள்ள ஆற்றல் (2014 இல் பாகிஸ்தானில் நடாத்தப்பட்ட சர்வதேச கடல்சார் மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் பிரசுரிக்கப்பட்ட பத்திரம்).