கணினியியல் பீடத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

2015 ஆண்டில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (கொ.பா.ப.) கணினியியல் பீடம் (FOC), சூரியவெவ பகுதியில் கொ.பா.ப. தெற்கத்திய வளாகத்தின் உருவாக்கத்துடன் தாபிக்கப்பட்டது. ஒரே கூரையின் கீழ் கணினியியல் பட்டங்கள் தொடர்பான மிகப் பரந்தளவான விடயப்பரப்புடன் கணினி கற்கைசார் பட்டங்களை வழங்கும் இலங்கை அரச பல்கலைக்கழக முறைமையிலுள்ள முதலாவது கணினியில் பீடம் இது என்பதுடன், கணினியியல் பீடத்தினால் வழங்கப்படும் கணினி கற்கைசார் பட்டங்கள் யாவும் ACM/IEEE சர்வதேச தரங்களுடன் ஒத்திசைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கணினியியல் சார்ந்த துறை, கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள்சார் பொறியியல், கணினி சார்ந்த கணிதவியல் மற்றும் புள்ளிவிபரவியல் தேவைப்பாடுகள், தொழில்நுட்பவியல் மற்றும் சமூகவியல் கணினி சார்ந்த தோற்றப்பாடுகள் எனும் கணினியியல் துறை பற்றிய கோட்பாடுசார் அடிப்படைகள் தொடர்பான கற்பித்தல் மற்றும் ஆய்வுத் தேவைகளை நிறைவேற்றும் இலக்குகளைக் கொண்ட நான்கு கற்கைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. கணினி பீட மாணவர்களின் பட்டதாரி கற்கைகளின் முதலாவது நாளிலிருந்து ஆய்வுச் செயற்பாடுகள் தொடர்பாக மாணவர்களது ஆர்வம், புலமைசார் ஆற்றல் மற்றும் ஈடுபாட்டுனான செயல்பாடு என்பவற்றை கட்டியெழுப்பவதற்கு முயற்சி எடுக்கின்றது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கணினியியல் பீடமானது, க.பொ.த. (உ/த) அனைத்துப் பாடப் பிரிவு மாணவர்களுக்கும் மிகப் பரந்தளவான கணினி கற்கைசார் பட்டங்களை வழங்கும் அரச பல்கலைக்கழக முறைமையிலுள்ள ஒரேயொரு கணினியியல் பீடமாகும்.

தகவல் தொழில்நுட்ப திணைக்களத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

தகவல் தொழில்நுட்ப திணைக்களமானது, கணினியியல் பீடத்தின் பழைமையான கற்கைப் பிரிவாகும். இக் கற்கைப் பிரிவின் மூலம் பிரயோக/செயன்முறை ரீதியான தகவல் தொழில்நுட்ப பாட விடயப்பரப்புக்கள் மற்றும் நிறுவன அமைப்புசார் நடத்தை, வியாபாரம் மற்றும் முகாமைத்துவம் சார்பான பாடநெறிகளை வழங்குகின்றது. இக் கற்கைப் பிரிவானது, க.பொ.த. (உ/த) அனைத்துப் பாடப் பிரிவு மாணவர்களையும் இலக்காகக் கொண்டு தகவல் தொழில்நுட்பம் சார்பான பி.எஸ்சி. (கெளரவ) பட்டம் மற்றும் தகவல் முறைமைகள் சார்பான பி.எஸ்சி. (கெளரவ) பட்டம் ஆகிய இரண்டு பட்டங்களை வழங்குகின்றது. முதல் இரு வருடங்களிலும் பாட விடயப்பரப்புக்கள் இரண்டு பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாகவும் பொதுவானது என்பதுடன், தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் முறைமைகள் பற்றிய சிறப்புத் துறை மூன்றாவது ஆண்டில் ஆரம்பிக்கப்படுகின்றன. இப் பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் இரண்டும் தொழில்நுட்ப அறிவுடனான, அதிகம் தொழில்நுட்பம் சார்ந்த பட்டதாரிகள் (IT) மற்றும் அதிகம் முகாமைத்துவம்/வியாபாரம் சார்ந்த பட்டதாரிகள் (IS) எனும் இரு மாறுபட்ட திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குகின்றது.

கணினி விஞ்ஞானங்கள் திணைக்களத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

கணினி விஞ்ஞானங்கள் திணைக்களமானது, கணினி தொடர்பான விஞ்ஞான ரீதியான மற்றும் கோட்பாடுசார் தோற்றப்பாடுடைய பாட விடயப்பரப்புக்களை வழங்குவதுடன், செயற்கைப் புலணாய்வு துறையை விருத்திசெய்வது பற்றிய விசேட முக்கியத்துவத்துடன் கணினி கற்கைசார்பாக வெளிப்படுகின்ற போக்குகளுடன் சம்பந்தப்பட்ட புதிய பாட விடயப்பரப்புக்களை அறிமுகப்படுத்துகின்றது. கற்கைப் பிரிவானது தற்போது க.பொ.த. (உ/த) பெளதிக விஞ்ஞானப் பிரிவு மாணவர்களை இலக்காகக் கொண்டு கணினி விஞ்ஞானம் சார் பி.எஸ்சி. (கெளரவ) பட்டத்தை வழங்குகின்றது. அதேபோல், இக் கற்கைப் பிரிவின் மூலம் மென்பொருள் பொறியியல் சார் பி.எஸ்சி. (கெளரவ) பட்டம் கணினி பொறியியல் சார் பி.எஸ்சி. (கெளரவ) பட்டம் தொடர்பாக அதிகளவான வீதத்தில் கணினி கற்கைசார் பாட விடயப்பரப்புக்களை வழங்குகின்றது. கற்கைப் பிரிவு, கோட்பாடுசார் கணினியியல் மற்றும் செயற்கைப் புலணாய்வு போன்ற பரந்தளவான விடயப்பரப்புக்கள் பற்றிய விரிவான பகுதிகள் சார்பாக ஆய்வில் ஈடுபடுகின்றது. இத் திணைக்களமானது பீடம் முழுவதும் பரந்த ஆய்வுக் கலாச்சாரத்தை பலப்படுத்துவதில் ஈடுபாடு கொண்டுள்ளது.

மேலும் தகவலுக்கு, கணினி பீடத்தின் இணையதளத்தில் சென்று >>