சட்ட பீடத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட பீடம், பயிலிளவல் அலுவலர்கள் இலங்கையின் முப்படைகளிலும் சட்ட உத்தியோகத்தர்களாக கடமையாற்றுவதற்கான தகைமையைப் பெற உதவும் வகையில் சட்டத்துறை சார் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் 2011 ஆண்டில் 22 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது சட்ட பீடமானது, 200 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி வசதியை பெற்றுக்கொடுத்துள்ளது. அவர்கள், பயிலிளவல் அலுவலர்கள், கட்டணம் செலுத்தும் தொண்டர் பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் நாள்முறை மாணவர்கள் ஆகியோராகும்.

பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கும் இப் பீடமானது, புதுமையாக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் வலுவான கல்வி சார்பான அனுபவங்களை பெற்றுக்கொடுக்கின்றது. சட்டக் கல்வி சம்பந்தமாக தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் போட்டிமிக்க சட்டக் கல்லூரிகளிடையே சட்டக் கற்கைகளுக்கான தலைசிறந்த முதன்மை நிறுவனமாக தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சட்ட பீடம் அர்ப்பணிப்புடன் உழைக்கின்றது.

தொலைநோக்கு

முப்படைகளுக்கும் அரசாங்கத்துறைக்கும் பாரியதாக சமூகத்திற்கும் சட்டத்துறை சார்ந்த வகையில் சேவையாற்றுவதற்காக கல்விசார் மற்றும் தொழில்சார் தகைமைகளைக் கொண்ட விசேடத்துவமிக்க பட்டதாரிகளையும் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளையும் உருவாக்குவதற்கான அதன் புதுமையான தகுதிக்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்ட சட்ட பீடமொன்றாக விளங்குதல்.

செயற்பணி

கல்விசார் மற்றும் தொழில்சார் ரீதியில் தகைமைகளையுடைய சிறந்த பணியாளர்களின் மேற்பார்வையுடன் சட்ட கற்கைப் பிரிவின் கீழ் ஒழுங்காக வழிகாட்டப்பட்ட மற்றும் சட்டத் துறையில் தனித்துவமிக்க பட்டப்படிப்பு பட்டதாரிகளையும் பட்டமேற்படிப்பு பட்டதாரிகளையும் உருவாக்குவதற்காக உயர் தரத்திலான ஆய்வுகளை நிறைவேற்றக்கூடிய மாணவரை மையப்படுத்திய கல்விசார் அனுபவத்தை உறுதிப்படுத்துதல் ஆகும்.

சட்டமாணி பட்டம் (LLB)

2010 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட சட்ட பீடத்தின் மூலம் சட்டமாணி (LLB) பட்டங்களும் ஏனைய பட்டமேற்படிப்பு பட்டங்களும் வழங்கப்படுகின்றன. பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் இராணுமல்லாத (சிவில்) மாணவர்கள் சட்டத் துறையில் கல்விசார் மற்றும் தொழில்சார் ரீதியில் தகைமை பெறுவதற்காக பயிற்சியளிப்பதே நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோளாகும்.

 

பீடாதிபதி

கலாநிதி எஸ்.டபிள்யூ.பீ. மஹானாமஹேவா – எல்.எல்.பி. (கெளரவ) (கொழும்பு), எல்.எல்.எம். – வணிகவியல் சட்டம் (மெல்போர்ன்), பீஎச்.டீ. (குவின்ஸ்லாந்து), பீ.ஜீ. திப்ளோ. IIHR (பிரான்ஸ்), சட்டத்தரணி, உறுதிப்பிரமாண ஆணையாளர், IBA புலமையாளர் (ஐ.அமெ.) சட்டத் திணைக்களம்

திணைக்களத் தலைவர்

திரு. டப்ளியூ.எஸ். விஜேசிங்ஹ – எல்.எல்.எம்., எல்.எல்.பி., சட்டத்தரணி, பீ.ஜீ. திப்ளோ. சர்வ. உறவு. சார், Com. பற்றிய திப்ளோ. SW, CTHE

பணியாளர்கள் அங்கத்தவர்கள்

சிரேஷ்ட விரிவுரையாளர்

திரு. டபிள்யூ.எம். அமரதாச – பி.ஏ. (கெளரவ) (ஸ்ரீஜய), எல்.எல்.பி. (கொழும்பு),

எம்.ஏ. (கொழும்பு), சட்டத்தரணி

 

விரிவுரையாளர்கள் (தகுதிகாண்)

Ms எம்.ஆர்.ஐ.கே. முனசிங்ஹ – எல்.எல்.பி. (கெளரவ), சட்டத்தரணி

Ms ஆர்.பி.டபிள்யூ.எம்.எச். ரத்னமலலா – எல்.எல்.பி. (கெளரவ) (கொழும்பு), எல்.எல்.எம். (கொழும்பு), எல்.எல்.எம். (மின்னசூடா), சட்டத்தரணி

திருமதி ஜே.ஏ.டீ. ஜயகொடி – எல்.எல்.பி. (கொழு), சட்டத்தரணி, உறுதிப்பிரமாண ஆணையாளர், கம்பனி செயலாளர் மற்றும் பிரசித்த நொத்தாரிசு

Ms கே.டபிள்யூ.எச்.எம்.ஆர்.எஸ்.டீ. எல்கடுவ – எல்.எல்.பி. (கெளரவ) (கொழும்பு பல்கலைக்கழகம்), சர்வதேச உறவுகள்சார் திப்ளோ. (கெளரவ), AATSL இறுதிப் பரீட்சை சித்தி

Ms எம்.பீ.சி. விஜேசூரிய – எல்.எல்.பி. (கெளரவ), சட்டத்தரணி, எல்.எல்.எம். பட்டத்தைக் கற்பவர் (சட்ட பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்)

Ms ஜீ.வீ.ஏ.ஏ.ரீ. கஜதீர – எல்.எல்.பி. (கெளரவ) (கொழும்பு பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. சட்டம் சார்ந்த முகாமைத்துவம் (கெளரவ), இலண்டன் பொருளியல் கல்லூரி – இலண்டன் பல்கலைக்கழகம், சட்டத்தரணி, கூட்டாண்மை சட்டம் சார் பட்டத்தின் பின்னரான சட்டத்தரணி திப்ளோமா

Ms டபிள்யூ.ஏ.பி.டீ. விக்கிரமசிங்ஹ – எல்.எல்.எம். (கெளரவ), எல்.எல்.எம். பட்டத்தைக் கற்பவர் (சட்ட பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்)

மேலும் தகவலுக்கு, இணையதளத்தில் சென்று >>