இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடம் (FAHS), கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பீடமாகும். இலங்கையின் சுகாதார பெறுபேறுகளை மேம்படுத்துவதும் சுகாதார பராமரிப்புசார் வழங்கலில் பரிமாற்றத்தை ஏற்படுத்துவதும் இப் பீடத்தின் உருவாக்கல் தொடர்பாக பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் தாதியியல். இயன்மருத்துவம், மருந்தாக்கவியல், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள் மற்றும் ஊடுகதிர்ப்படமெடுப்பு ஆகியவை தொடர்பான பட்டதாரி பாடநெறிகளுக்காக இப் பீடத்தின் சிவில் மாணவர்களைக் கொண்ட முதலாவது உள்வாங்கல் குழுவானது அனுமதியை பெற்றுக்கொண்டது. மிக விரைவிலேயே சுகாதார விஞ்ஞானங்கள் சார் துறைகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு ஆகிய இரு பாடத்திட்டங்களையும் வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படவுள்ளது. பீடத்திலுள்ள மாணவர்களுக்கு உள்நாட்டு, அதேபோல் வெளிநாட்டு கல்விசார் பணியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் மிக உன்னதமான சூழலில் பல்வேறு வகைப்பட்ட ஒப்படைப்புக்கள் ஊடாக கற்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்துடன், சுகாதார பராமரிப்பு பற்றிய உலகலாவிய பிரச்சினைகள் சம்பந்தமாக பீடம் சார்ந்த சர்வதேச கவனத்தை ஈர்ப்பதை உறுதிசெய்யும் வகையில் நீண்டகாலம் செல்லமுன்பே பீடமானது வெளிநாட்டு மாணவர்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. மிகச் சிறந்த பீடமாக ஆகுவதும், நவீன சுகாதார பராமரிப்புச் சூழலில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக முழுமையான அர்ப்பணிப்பும் ஆற்றலும் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதும் எமது குறிக்கோள்களாகும். எமது பட்டதாரிகள் தமது எதிர்கால தொழில்களை உலகின் எப்பாகத்திலும் நிறைவேற்றக்கூடிய வகையில் வலுவூட்டுகின்ற பீடமொன்றாக நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம்.

கொள்கைகள் மற்றும் மேம்படுத்தல்கள்

 • ஆய்வுக் கொடுப்பனவு
 • விருது வழங்கல் வைபவங்கள்
 • செயலமர்வு/ பயிற்சியளித்தல்
 • ஆய்வுசார் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்கள்
 • முதுத்தத்துவமாணி மற்றும் தத்துவக் கலாநிதி பட்ட கற்கைசார் வாய்ப்புக்கள்

மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வுகள்

விசேடமான வளங்கள்

 • உயிரியல் மருத்துவ ஆய்வுகூடம்
 • வின்ட் ரெனல் (Wind Tunnel)
 • 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் இயங்கும் ஆய்வுகூடம்

விசேட வருகையாளர்கள் மற்றும் தோழமை

 • விசேட வருகையாளர்கள் மற்றும் தோழமை

கொ.பா.ப. ஆய்வுசார் துறைகள்

 • கொ.பா.ப. ஆய்வுசார் துறைகள்

பயிலிளவல் அலுவலர்கள்

பட்டதாரி நிகழ்ச்சித்திட்டங்கள்

 

கொ.பா.ப. தெற்கத்திய வளாகம்

 1. வழங்கப