தரமான வை-பை வசதியை வழங்கும் நிகழ்வு

நவீன உலகில் அறிவை பகிர்தல், பல்வேறு விதமான இணைப்பாட விடயங்கள், பாடவிதானங்களுக்கு மேலான விடயங்கள் என்வற்றை பரப்புவதற்கும் பெறுவதற்கும் இணையம் மிகமுக்கிய வசதிகளை வழங்குகிறது. பல்கலைக்கழக கலாசாரத்தில் வை-பை என்பதுவும் எடுத்துச் செல்லக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களும் அத்தியாவசிய தேவைகளாகின்றன. உலகளாவிய கல்வி செல்நெறியில் பராம்பரிய கல்வி நிலையிலிருந்து நவீன கணணிமய கல்விச் சூழலுக்கு நகர்வது இன்றியமையாததாகின்றது.
தற்போது கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அதிகரிப்பு காரணமாக இப்போதுள்ள கணணிமய வசதிகள் போதாததாகவுள்ளது. குறிப்பாக வை-பை வசதிகள் மாணவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய வசதி செய்யப்பட வேண்டியுள்ளது. கடந்த காலத்தைவிட தற்காலத்தில் மாணவர்கள் ஆய்;வுகளிலும் சுயகற்றலிலும் அதிகம் ஈடுபடுகின்றனர்.
எனவே, பல்கலைக்கழகம் கணணிமய வசதிகளை விருத்தி செய்ய திட்டமிட்டது. இதன்படி, வை-பைவசதியானது சுதந்திரமாக 24/7 எனும் நிலையில் வேகமாக பயன்படுத்தக் கூடிய நிலையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட வை-பை வசதி 01.03.2017 இல் பல்கலைக்கழக உபவேந்தர் இணைக் கடற்படைத்தளபதி ஜே.ஜே. ரணசிங்க அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *