உலகலாவிய அணுகுமுறையுடன் முதன்மை பல்கலைக்கழகமொன்றாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தெற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு கற்கைகள் தொடர்பான பட்டதாரி பாடநெறிகளை வழங்கும் ஒரே பல்கலைக்கழகமாகும். பொதுநலவாய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் (ஐக்கிய இராச்சியம்) உறுப்புரிமையை கொண்டுள்ள நாம், நவீன பாதுகாப்பு முகாமைத்துவ சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில் பயிலிளவல் அலுவலர்களுக்கு கற்பித்தல் மற்றும் பயிற்சியளித்தல் சார்பாக உலகலாவிய தர நியமங்களை பேணிச்செல்வதுடன், “எப்போதும் தமது தாய் நாட்டுக்காகவே” என்பதற்கிணங்க அர்ப்பணிப்புமிக்க, தலைசிறந்த தரைப் படை, கடற் படை மற்றும் விமானப் படை உத்தியோகத்தர்களை உருவாக்குவதற்கு பங்களிப்புச் செய்வது தொடர்பாக பெருமையடைகின்றோம்.

பாதுகாப்பு கலைக்கழகமாக 1981 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது, பாதுகாப்பு துறை சார்ந்த பல்வேறு பிரிவுகள் மூலமாக செயன்முறை ஆய்வுகளுடன் சேர்த்து, கல்விசார் மற்றும் தொழில்சார் நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக சிறந்த தரத்திலான மாணவர்களை மையப்படுத்திய கல்வியை உறுதிசெய்யும் அதியுன்னதமான பணியுடன் 1986 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அந்தஸ்துக்கு தரமுயர்த்தப்பட்டது. பொறியியல், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தமது உயர் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள விரும்பும் சிவில் மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் தனது கதவுகளை திறந்துவிட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பயிலிளவல் அலுவலர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் ஆட்கள் ஆகியோர்களுக்கு இளமாணிப் பட்டங்களையும் பட்டமேற்படிப்பு பட்டங்களையும் தற்போது வழங்கிவருகின்றது.

இலங்கையின் தலைநகரிலிருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரத்மலானை நகரில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகமானது, கண்கவர் அழகிய இயற்கை குள சூழலுடன், சுமார் 48 ஏக்கர் விஸ்தீரணத்தைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக சூழலின் புராதன தன்மையை அதன் பழங்கால நிலையிலேயே பாதுகாப்பதற்காக அதன் இயற்கைச் சூழலும் தனித்துவமான மற்றும் அரிதான பல்வகைப்பட்ட தாவர இனங்களும் மிகக் கவனமாக பேணிப் பராமரிக்கப்படுகின்றன. பீடமானது, பாதுகாப்புக் கற்கைகள் மற்றும் உபாயவழிக் கற்கைகள் எனும் இரண்டு திணைக்களங்களைக் கொண்டுள்ளது. உபாயவழிக் கற்கைகள் பிரிவானது பாதுகாப்பு தொடர்பான ஆய்வுச் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பதுடன், பாதுகாப்புக் கற்கைகள் பிரிவானது பயிலிளவல் அலுவலர்களின் ஒழுக்கம், இராணுவப் பயிற்சி மற்றும் நிருவாகம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றது.

பாதுகாப்பு கற்கைகள் திணைக்களமானது கெமுனு, கஜபா, விஜபா, பெரகும் மற்றும் மஹசேன் எனும் ஐந்து ஸ்குவாட்ரன் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஸ்குவாட்ரன் பிரிவும் பல்வேறு உள்வாங்கல்களுடன் தொடர்புபட்ட பயிலிளவல் அலுவலர்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏவுதல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பல டுரூப்ஸ் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்குவாட்ரன் பிரிவு ஏவுநர் முழு ஸ்குவாட்ரன் பிரிவுக்கும் பொறுப்பாக இருக்கும் அதேவேளை, டுரூப்ஸ் பிரிவுகள் அந்தந்த டுரூப்ஸ் பிரிவு ஏவுநர்களின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றன.

மேலும் தகவலுக்கு, இணையதளத்தில் சென்று >>