பொறியியல் பீடம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

பொறியியல் பீடமானது, 2009 இல் தாபிக்கப்பட்டதுடன், இது இலங்கையிலுள்ள ஒரேயொரு இராணுவ கல்விசார் பொறியியல் நிறுவகமாகும். பீடமானது, இயந்திரப் பொறியியல் திணைக்களம், சிவில் பொறியியல் திணைக்களம், மின், இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் திணைக்களம், விமானம் சார் பொறியியல் திணைக்களம், கடல் சார் பொறியியல் மற்றும் விஞ்ஞானங்கள் திணைக்களம், கணிதவியல் திணைக்களம் ஆகிய ஆறு பாடக்கூறுகள் சார் திணைக்களங்களின் கீழ் ஒன்பது துறைகளில் முப்படை சேவை அதிகாரிகள், பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் சாதாரண சிவில் மாணவர்கள் ஆகியோர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பட்டங்களை வழங்கி வருகின்றது. பொறியியல் பாடநெறியானது, மிகச் சிறந்த அனுபவத்தைக் கொண்ட கற்கைசார் மற்றும் பொறியியல் தொழில்வாண்மையாளர்களால் நடாத்தப்படுகின்றது. மிகவும் கடினமான நிலைமைகளின் கீழ் சிக்கலான வேலைகளை நிறைவேற்றும் ஆற்றல்மிக்க நேர்த்தியான ஒழுக்கத்தையுடைய பட்டதாரிகளை உருவாக்குவதற்கான பல்கலைக்கழகத்தின் முயற்சிக்கு இப் பீடம் ஆதரவை வழங்குகின்றது.

விமானம்சார் பொறியியல் திணைக்களத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். விமானம் சார் கற்கைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது எமது பொறுப்பாகும். இத் திணைக்களத்தின், நிகழ்ச்சித்திட்டங்களானது, விமானம் சார் பொறியியல் சம்பந்தப்பட்ட அதிகமான விரிவுரைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியினுள் நடாத்தப்படுகின்றன. விரிவுரைகள் கற்கைப் பிரிவு பணியாளர்கள் மற்றும் இலங்கை விமானப் படையின் உத்தியோகத்தர்களான வருகைதரும் விரிவுரையாளர்கள் ஆகியோர்களால் நடாத்தப்படுகின்றன. பொறியியல் நிகழ்ச்சித்திட்டங்கள் பல்கலைக்கழகத்தின் இயந்திர, கடல் சார், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் திணைக்களங்களின் உதவியுடன் நடாத்தப்படுகின்றன. திணைக்களமானது, விமானம் சார் பொறியியல் ஆய்வுகூட வசதியையும் கொண்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட பாடங்களில் பட்டதாரி மாணவர்களுக்கு செயன்முறைப் பயிற்சிகளை வழங்கும் Cessna 337 விமானமொன்றையும், SF – 260 W விமானங்கள் மூன்றையும், IA – 58 Pukara விமானமொன்றையும், Bell 212 ஹெலிகப்டரின் தொழிற்பாட்டு மாதிரியொன்றையும் டெர்பைன் மற்றும் பிஸ்டன் விமான இன்ஜின்களையும் விமானத்துக்குரிய பாகங்களின் தொகுதிகளையும் கொண்டமைந்துள்ளது. செயன்முறை அமர்வுகள் மற்றும் செயலமர்வுகள் கொ.பா.ப. விமானம் சார் பொறியியல் ஆய்வுகூடத்திலும், இலங்கை விமானப் படையின் பொறியியல் பிரிவுகள் மற்றும் பறக்கும் தளங்களிலும் நடாத்தப்படுகின்றன.

விமானம்சார் பொறியியல் கற்கைப் பிரிவானது, ஆரம்பத்தில் கலைகள்சார் கற்கைகள் பணிப்பாளரின் கீழ் கொ.பா.ப. இல் தனியான திணைக்களமாக 1993 இல் தாபிக்கப்பட்டது. இது உருவாக்கப்படுவதற்கு முன்பு, இலங்கை விமானப் படையின் தொழில்நுட்ப பொறியியல் கிளைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட சகல மாணவர்களுக்கும் இயந்திரப் பொறியியல் பின்னனியின் அடிப்படையில் பாதுகாப்புக் கற்கைகள் தொடர்பான பட்டமொன்று வழங்கப்பட்டது. தேசத்தின் தேவைப்பாடுகள் மற்றும் இலங்கை விமானப் படையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்பவற்றின் அடிப்படையில் சிறந்த விமானம் சார் பொறியியல் பின்னனியுடனான திறமையுள்ள உத்தியோகத்தர்களை உருவாக்குகின்ற கல்விசார் நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கான அவசியம் ஏற்பட்டது. அதற்கிணங்க கற்கை நிறுவனமானது இலங்கையில் விமானம் சார் பொறியியல் பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை வழங்கும் ஒரே அரச நிறுவனமாக ஆகியது. கற்கை நிறுவகம் இன்று இருப்பதுபோல பல்கலைக்கழகமாக மாற்றப்படும் வரையும் இதே அமைப்பில் காணப்பட்டது. இத் திணைக்களத்தினது முதலாவது மாணவர் குழு, உள்வாங்கல் 11 இன் விமானம் சார் பொறியியல் மாணவர்களாகும். 1995 இல் நான்கு பெண் பயிலிளவல் அலுவலர்களையும் உள்ளடக்கிய பெண் பயிலிளவல் அலுவலர்களின் முதலாவது குழு கொ.பா.ப. இற்கு சேர்த்துக்கொள்ளப்பட்டதுடன், அவர்கள் தமது பட்டப்படிப்பை விமானம் சார் பொறியியல் திணைக்களத்தின் கீழ் பூர்த்திசெய்தனர். அதிலிருந்து, திணைக்களமானது இலங்கை விமானப் படைக்கு திறமை வாய்ந்த விமானம் சார் பொறியியலாளர்களாக ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்கள் இரு சாராரையும் உருவாக்கி வருகின்றது.

2011 இல் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தர உறுதி மற்றும் சான்றுப்படுத்துதல் சபை மூலம் திணைக்களம் அங்கீகரிக்கப்பட்டமையானது, அதன் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லினை தாண்டியதாகக் கருதலாம். பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக விரிவாக்கல் செயற்பாடுகள் நிகழ்ந்ததனால், 2011 இன் பிற்பகுதியில் பொறியியல் பீடம் உருவாக்கப்பட்டதுடன், இத் திணைக்களம் தற்போது பொறியியல் பீடத்தின் கீழ் இயங்கி வருகின்றது. 2013 இல் 18 மாணவர்கள் கொண்ட நாள்முறை மாணவர்களின் முதலாவது குழு சேர்த்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து கற்கைப் பிரிவினது கதவுகள் சிவில் மாணவர்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. இது, இலங்கையை தெற்காசியா பிராந்தியத்தின் கல்வி மற்றும் விமானம் சார் கேந்திர நிலையமாக ஆக்கும் தேசிய கொள்கைக்கு இணைந்த வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது. திணைக்களமானது மாணவர்களின் செயன்முறை அமர்வுகளை நடாத்துவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட விமானம் சார் பொறியியல் முறைமை வசதிகளுடன் அமைந்துள்ளது. திணைக்களமானது, வளமிக்க தொழில்வாண்மையாளர்கள், வேறு வசதிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை திணைக்களத்தின் மூலமாகவும் இலங்கை விமானப் படையின் மூலமாகவும் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக தரமான கல்வியை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. 2012 இன் பின் அரைப்பகுதியில், விமானம் சார் பொறியியல் முறைமை ஆய்வுகூடமானது உயர் தர நியமங்களுக்கேற்ப தரமுயர்த்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து கொ.பா.ப. நூல் நிலையத்திற்காக விமானம் சார் பொறியியல் சம்பந்தப்பட்ட நூல்கள் ரூ. 2 மில்லியன் பெறுமதிக்கு கொள்வனவு செய்யப்பட்டன. 2013 இல் விமானப் பராமரிப்புப் பொறியியலாளர்களை உருவாக்குவதற்கான மற்றுமொரு பட்ட நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், அதனூடாக விமான துறைசார் கேள்வி தொடர்பாக மிகப் பரந்தளவான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

தேசத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி சார்பாக அதி உயர் பொறுப்பினை தோல் மீது தாங்குவதற்காக மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவர்களை வலுவூட்டுதல் என்பவற்றுக்காக ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலான மேடையொன்றை உருவாக்கி ஆர்வத்தை ஏற்படுத்தும் விமானம் சார் பொறியியல் கற்கையின் அத்தியாவசியமிக்க பிரதான இடமாக விளங்குதல்.

திணைக்களத்தின் செயற்பணி

காலத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்றவகையில், தரமான கல்வியை வழங்குவதன் மூலம் விமானம் சார் பொறியியல் கல்வி மற்றும் ஆய்வை மேம்படுத்துதல், இலங்கை விமானப் படையின் விமானம் சார் பொறியியலாளர்களாக அவர்கள் பின்னர் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்காக தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்ட பட்டதாரிகளை உருவாக்குவதாகும்.

கருத்திட்டங்கள்

 • வின்ட் ரனல் (Wind Tunnel) கருத்திட்டம்.
 • MI–17 பலநோக்கு ஹெலிகப்டருக்கான தேடுதல் விளக்கை வடிவமைத்தல்.
 • விமான உறுதிச் சமநிலை மற்றும் கட்டுப்பாட்டு கருத்திட்டம்.

விமானம் சார் பொறியியல் தொடர்பான விஞ்ஞானமாணி – முழு நேர பாடநெறி

பாடநெறி விபரம்

விமானம் சார் பொறியியல் பட்டப் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தால் விமானம் சார் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் வழங்கப்படுவதுடன், விமானங்களிலும், விமானங்களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த துறைகளிலும் திறமை வாய்ந்த விமானம்சார் பொறியியலாளர்களாக மிக்க நம்பிக்கையுடன் பதவிகளை வகிப்பதற்காக மாணவர்களை தயார்படுத்தும். இராணுவ பிரிவு மாணவர்களை பொருத்தவரையில், அவர்கள் இலங்கை விமானப் படை சார்பாக ஆய்வும் அபிவிருத்தியும் மற்றும் பரிசோதனையும் தொழிற்பாடுகளும் போன்ற பணிகள் தொடர்பாக பரந்தளவில் பல்வேறு ஒப்படைப்புக்களுக்கான பயிலிளவல் உத்தியோகத்தர்களை தயார்படுத்துகின்றது.

 1. மொத்த GPA திறமை பெறுமானம்   : 135

2. மொத்த NGPA திறமை பெறுமானம்:   15

3. மொத்த MGPA திறமை பெறுமானம்:   35

 

குறிக்கோள்கள்

விமானம் சார் பொறியியல் பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள்களானது, பல்வேறு அமைப்புக்களில் வெளிப்படுகின்றன. அவைகளை தனித்தனியாக குறிப்பிடுவதாயின்,

 1. விரிவான விடயப்பரப்பைக் கொண்ட விமானம் சார் பொறியியல் கலை தொடர்பான விடயம், விமானத்தின் பராமரிப்பு முதல் விமானக் கட்டமைப்புடன் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கோட்பாடுகள், ஓட்டுதல், விமான உறுதிச் சமநிலையும் கட்டுப்பாடும், வானூர்தி வாயு இயக்கவியல், விமான ஆயுத தொழில்நுட்பம் வரை விரிந்து செல்கின்றது.
 2. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இப் பிரதேசத்தில் அமைந்துள்ளமை, அதன் கற்கை செயற்பாடுகளை பலமான செயன்முறைகளால் மேம்படுத்தியிருப்பது இலங்கை விமானப் படையின் பிரதான விமானப் பொறியியல் மற்றும் பறக்கும் தளங்கள் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்திருப்பதாகும்.
 3. விமானம் சார் பொறியியல் கலையில் விசேட உப துறைகளில் பல்வேறு நிபுணத்துவமுள்ள மற்றும் விமானப் பராமரிப்பு, ஆய்வு, தொழிற்துறைசார் ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் விமான சேவை துறைசார் அபிவிருத்தி தொடர்பாக செயல்பாடுடைய உள்ளக மற்றும் வெளியக கல்விசார் பணியாளர்கள் வளம்.

கற்றல் மூலமாக எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

கொ.பா.ப. விமானம் சார் பொறியியல் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்கள், அவர்களுக்கு பின்வரும் விடயங்களை நிறைவேற்ற முடியுமென காண்பித்துள்ளனர்.

 1. விஞ்ஞானமாணி பட்டத்துடன் அதற்கேற்ற வகையில் விமானம் சார் பொறியியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அடிப்படை சார்ந்த அறிவை பிரயோகித்தல்.
 2. பரிசோதனை ரீதியாக மற்றும் கணித ரீதியான பரிசோதனை திட்டமிடலும் அமுலாக்குதலும் மற்றும் அவ்வாறான பரிசோதனைகளில் சரியான முடிவை நோக்கிச் செல்வதற்காக தரவுகள் சார்பாக விளக்கமளித்தலும் பகுப்பாய்வு செய்தலும்.
 3. பொறியியல் சார் திட்டங்களை அபிவிருத்தி செய்தலும் மதிப்பீடு செய்தலும் அக்கரைகொண்ட தரப்பினர்களின் தேவைப்பாடுகளை நிறைவேற்றுதலும்.
 4. உரையாடல் மற்றும் எழுதுதல் திறன்களை பயனுறுதிமிக்க வகையில் பிரயோகித்தல்.
 5. பல்வேறு துறைகள்சார் குழுக்களின் அங்கத்தவர்களாக பயனுறுதிமிக்க வகையில் செயலாற்றுதல்.
 6. சுயாதீனமான கற்றல் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடும் திறன்களை வெளிப்படுத்துதல்.

நிகழ்ச்சித்திட்டத்தின் பாடத்திட்டம்

விமானப் பராமரிப்பு பொறியியல் பற்றிய பொறியியலில் விஞ்ஞானமாணி

விஞ்ஞானமாணி (பொறியியல்) – முழு நேர பாடநெறி

பாடநெறி பற்றிய விபரம்

விமானம் சார், இயந்திர, மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியன தொடர்பான எண்ணக்கருக்களை ஒன்றுசேர்த்து விமானப் பராமரிப்பு பொறியியல் சார்ந்த எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவதன் ஊடாக பட்டதாரி அபேட்சகர்களை திறமையான விமானப் பராமரிப்பு பொறியியலாளர்களாக  ஆக்குவதற்காக சிறந்த வகையில் தயார்படுத்துவதும், அவர்கள் விமானங்களை பராமரிக்கும் அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முழுமையான தகைமைகளை அடைந்துகொள்வதும் நான்கு ஆண்டுகள் கொண்ட இப் பட்டதாரி நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

 1. மொத்த GPA திறமை பெறுமானம்   : 135

2. மொத்த NGPA திறமை பெறுமானம்:   15

3. மொத்த MGPA திறமை பெறுமானம்:   35

குறிக்கோள்கள்

 1. பட்டதாரிகள் விமானப் பராமரிப்பு தொடர்பாக நிபுணத்துவ அறிவுடன் இணைந்த விரிவான பொறியியல் கல்வியையும் சேர்த்து பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துதல்.
 2. பொறியியல் சார் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மிகவும் பொருந்தக்கூடிய தொழில்நுட்பம் கலந்த பகுத்தறிவு சார்ந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கான ஆற்றலை பெற்றுக்கொடுப்பதுடன், விமானம் சார் முறைமைகள் பற்றிய கோட்பாடுகள் தொடர்பாக விரிவான புரிந்துணர்வைப் பெற்றுக்கொடுத்தல்.
 3. பொறியியல் துறையில் பரந்தளவிலான உட்பிரிவுகள் சார்பாக பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்கும் வகையில் விமானப் பராமரிப்பு, விமான உள்ளடக்கம் சார்ந்த, பொறியியல், இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், இலத்திரனியல் பொறியியல் ஆகியன சம்பந்தமான பரந்த அடிப்படையிலான கல்வியை வழங்குதல்.
 4. துறைசார்ந்த ஒழுங்குபடுத்துதல் அமைப்பின் மூலம் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளின் படி வணிக மற்றும் இராணுவ விமான படையணியை நடாத்திச் செல்வது சம்பந்தமாக தொழிற்துறையின் கேள்வியை பூர்த்திசெய்யும் வகையிலான ஆற்றலுடைய பட்டதாரிகளை உருவாக்குதல்.

எதிர்பார்க்கப்படும் கற்றல்சார் பெறுபேறுகள்

 1. விமானம் சார் தகைமை நியமங்களுக்கு தகுந்த வகையில் விமானப் பராமரிப்பு பணிகளை நடாத்திச் செல்வதற்காக பொருத்தமான பராமரிப்பு முறைகள் மற்றும் விஞ்ஞான ரீதியான கோட்பாடுகளை பயன்படுத்துதல்.
 2. சட்ட மற்றும் சட்டநியாயாதிக்க தேவைப்பாடுகள், அபாயம், பாதுகாப்பு, தரம் மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கவனத்தில் கொண்டு கருத்திட்டங்கள், ஆட்கள், வளங்கள் மற்றும் நேரம் ஆகியவற்றை முகாமை செய்தல்.
 3. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் உட்பட பரந்தளவான பொறியியல் கருவிகள் மற்றும் தொழில்நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, விமானப் பொறியியல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் இக் கருவிகளின் வரையறைகளை மதிப்பிடுதல்.
 4. தொழிற்துறையின் தேவைப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் திருப்தியான முறையில் கவனத்தைச் செலுத்தி, விமானங்களிலுள்ள முறைமைகளை கையாளுதல் மற்றும் வடிவமைத்தல்.

நிகழ்ச்சித்திட்டத்தின் பாடத்திட்டம்

சிவில் பொறியியல் கற்கைப் பிரிவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

சிவில் பொறியியல் திணைக்களமானது, சிவில் பொறியியல் சார்பாக பி.எஸ்சி. பொறியியல் சிறப்பு கெளரவப் பட்ட நிகழ்ச்சியை தற்போது வழங்கி வருகின்றது. இதற்கு முன்பு பி.எஸ்சி. (பாதுகாப்புக் கற்கைகள்) என்ற பட்ட நிகழ்ச்சியை நடாத்தியதுடன், முப்படையைச் சேர்ந்த பயிலிளவல் அலுவலர்களுக்காக மாத்திரமே நடாத்தப்பட்டது. மாற்றமடையும் தொழிற்துறைசார் தேவைப்பாடுகளை திருப்தி செய்யும் வகையில், அண்மையில் இப்பாடநெறியானது மீளவடிவமைக்கப்பட்டதுடன், பல்கலைக்கழக பீட – தொழிற்துறைசார் ஆலோசனை சபையின் சிபாரிசுகளுக்கு இணங்க பாடத்திட்டமானது திருத்தியமைக்கப்பட்டது. நிலைபேறான வடிவமைப்பும் நிர்மாணிப்பும், தொலை உணர்த்தி கற்கையும் வான்வழி புகைப்படக்கலையும், பூகோள தகவல் முறைமையும் (GIS) தேசப்பட வரைபியலும், சிவில் பொறியியல் சார்பான கட்டடக்கலை தோற்றம், தொழில்சார் ஒழுக்கநெறிகள், கட்டட சேவைகள்சார் பொறியியல் மற்றும் பாலம் சார்ந்த பொறியியல் போன்ற நவீன சிவில் பொறியியல் நடைமுறைகள் பற்றி கூடுதலான முக்கியத்துவம் செலுத்தப்படும் புதிய பிரிவுகள் சில விரிவான வடிவமைப்பு கருத்திட்டம் (CPD) எனும் வகையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. கல்விப் பிரிவானது, மனித மற்றும் பெளதிக வளங்கள் ஆகிய இரண்டு சார்பாகவும் அண்மைக் காலத்தில் குறிப்பிடத்தக்க விரிவாக்கல் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. முப்படை சார்ந்த சேவையிலுள்ள உத்தியோகத்தர்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாள்முறை மாணவர்களையும் சேர்த்துக்கொள்வதன் ஊடாக மாணவர் உள்வாங்கல் செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

செயற்பணி

சமூக, சூழல்சார் மற்றும் வலுவாதார தன்மை தொடர்பாக சரியான கவனத்தைச் செலுத்தி, முப்படை சேவை தொழிற்துறை / தொழில்முயற்சி என்பவற்றின் பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்ளக்கூடிய, பல்துறைகள் சார்ந்த கட்டமைப்புகளுக்கும் ஏற்ற சிவில் பொறியியல்சார் திறமைகளை உள்ளடக்கிய பட்டதாரிகளை உருவாக்குதல்.

நிகழ்ச்சித்திட்ட விபரம்

பாடநெறியின் பெயர்  : பொறியியல் சார் விஞ்ஞானமாணி

சுருக்கப் பெயர்             : பி.எஸ்சி. பொறியியல் (B.Sc. Eng.)

விசேட துறை                : சிவில் பொறியியல்

போதனை மொழி        : ஆங்கிலம்

 

பட்டதாரி நிகழ்ச்சித்திட்டத்திற்கான பாடநெறியின் காலம் 4 ஆண்டுகள் (எட்டு பருவங்கள்) என்பதுடன், பயிலிளவல் அலுவலர்களுக்கான இராணுவப் பயிற்சிக்கு விசேடமாக ஆறு மாத காலப்பகுதி மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்திலுள்ள மாணவர்கள் முதலாவது பருவத்தின் இறுதியில் அவர்களுடைய விசேட துறையை தெரிவு செய்துகொள்வார்கள். தற்போது கற்கைப் பிரிவானது, பின்வரும் பிரிவில் உள்ளடங்கும் மாணவர்களுக்கு கற்கை வசதிகளை அளிக்கின்றது.

 • ஆயுதப்படைகளில் நிரந்தரமாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பயிலிளவல் அலுவலர்கள்.
 • பொறுப்புரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்.
 • கட்டணம் செலுத்துதல் அடிப்படையில் தொண்டர் படை பயிலிளவல் அலுவலர்கள்.
 • கட்டணம் செலுத்துதல் அடிப்படையில் நாள்முறை மாணவர்களாக பீடத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்கள்.

நிகழ்ச்சித்திட்ட கட்டமைப்பு

நிகழ்ச்சித்திட்டத்திற்கான மொத்த தரப் புள்ளி சராசரி (GPA) திறமை பெறுமானங்களின் எண்ணிக்கை 135 ஆகும். இதற்கு மேலதிகமாக, பயிலிளவல் அலுவலர்கள் தொடர்பாக தரப் புள்ளி சராசரி சாரா (NGPA) 19 திறமை பெறுமானங்களும், ஏனைய மாணவர்களுக்கு தரப் புள்ளி சராசரி சாரா (NGPA) 21 திறமை பெறுமானங்களும் அவசியமாகும். அத்துடன், பட்டதாரி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக இராணுவ தரப் புள்ளி சராசரி (MGPA) 35 திறமை பெறுமானங்களையும் கொண்டுள்ளது.

அட்டவணை 01: மொத்த திறமை பெறுமான ஒதுக்கீடு

மின், இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புகள் பொறியியல் திணைக்களத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

மின், இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புகள் பொறியியல் திணைக்களம் தற்போது மின் மற்றும் இலத்திரனியல் சார் பி.எஸ்சி. பொறியியல், இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புகள் சார் பி.எஸ்சி. பொறியியல், உயிரியல் மருத்துவப் பொறியியல் சார் பி.எஸ்சி. பொறியியல் ஆகிய மூன்று பட்டதாரி பட்ட நிகழ்ச்சிகளை நடாத்துகின்றது. மூன்று நிகழ்ச்சித்திட்டங்களும், நான்கு வருடமும் ஆறு மாதக் காலப்பகுதியை கொண்டனவாகும்.

பாடநெறிகள்

மின், இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புகள் பொறியியல் திணைக்களமானது பல்கலைக்கழகத்திலுள்ள மிகப் பழமையான கற்கைப் பிரிவுகளில் ஒன்றென்பதுடன், அது பின்வரும் பிரதான பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மூன்றை நடாத்துகின்றது.

 • மின் மற்றும் இலத்திரனியல் சார் பொறியியல் பட்டம்.
 • இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்புகள் சார் பொறியியல் பட்டம்.
 • உயிரியல் மருத்துவப் பொறியியல் சார் பட்டம் (இது இணைந்த சுகாதார அறிவியல்கள் பீடத்துடன் இணைந்து கூட்டு பட்ட நிகழ்ச்சித்திட்டமாக வழங்கப்படுகின்றது).

மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் சார் விஞ்ஞானமாணி பட்டம் – பாடத்திட்டம்

இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் சார் விஞ்ஞானமாணி பட்டம் – பாடத்திட்டம்

இலங்கை கடற் படையின் கடல் சார் பொறியியலாளர்களுக்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்காக 1991 ஆண்டில் உருவாக்கப்பட்ட கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் பொறியியல் திணைக்களமானது, இலங்கையில் கடல்சார் பொறியியல் கற்கைகளுக்கான முன்னோடி நிறுவனமாகும். மிக அத்தியாவசியமான கடல் சார் பொறியியல் அறிவைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக இலங்கை கடற் படையை படிப்படியாக பலப்படுத்தும் வகையில் அதனது செயற்பணியை இக் கற்கைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது. இதுவரை கற்கைப் பிரிவானது, இலங்கை கடற் படைக்காக கடல்சார் பொறியியலாளர்கள் 125 பேருக்கும் மேற்பட்டோரை உருவாக்கியுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் மிக உயர்ந்த பதவிகளைப் பெற்றுக்கொள்வதில் வெற்றியடைந்துமுள்ளனர். இக் கற்கைப் பிரிவானது தற்போது கடல்சார் பொறியியல் தொடர்பாக நவீன தேவைப்பாடுகள் மற்றும் கேள்வியை கவனத்தில் கொண்டு, அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.

உட்கட்டமைப்புக்கள் தொடர்பாக நோக்கும்போது, கற்கைப் பிரிவானது செயன்முறை அமர்வுகள் மற்றும் மாணவக் கருத்திட்டங்கள் என்பவற்றுக்குத் தேவையான ஆய்வுகூட மற்றும் வேலைத்தள வசதிகளை சிறப்பான முறையில் கொண்டுள்ளது. மேலும், கற்கைப் பிரிவானது, தொழிற்துறை சார் முன்னோடிகளுடன் இணைந்து, தமது மாணவர்களை உலகலாவிய கடற்படைசார் சமூகத்தினரிடையே தனித்துவமுடையவர்களாக ஆக்கும் எண்ணத்துடன், அவர்களுக்கு கூட்டான மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதலை உறுதிசெய்கின்றது. அதனால், உலகலாவிய ரீதியில் கூடிய கேள்வியைக் கொண்ட கடல்சார் பொறியியல் பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டிலும் அதேபோல் பிராந்தியத்திலும் தகைமையுடைய இளம் சமூதாயத்தினருக்கு வழி திறந்துவிடப்பட்டுள்ளது.

செயற்பணி

கல்விச் செயற்பாடுகளுக்கு இணைந்த வவையில் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவித்து விருத்தி செய்வதுடன், கடல்சார் பொறியியல் துறையினுள் உயர் கல்வியை வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். கடல்சார் பொறியியல் துறை தொடர்பான நிறுவனங்களுடன் தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் நாம் விரும்புகின்றோம்.

பட்ட நிகழ்ச்சித்திட்டம்

நான்கு வருட காலப்பகுதியைக் கொண்ட கடல்சார் பொறியியல் விஞ்ஞானமாணிப் பட்டத்தின் மூலம் திறமையுள்ள பொறியியலாளர்களை உருவாக்குவதற்காக முழுமையான அறிவைப் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, கப்பலொன்றை நடாத்திச் செல்வதற்கு உதவியளிக்கும் முறைமை தொடர்பாக சிறந்த அறிவைப் பெற்றுக்கொடுப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. இதில் கப்பலின் உள்ளக முறைமைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயத்தலைப்புக்களுடன், கப்பல் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என்பனவும் உள்ளடங்குகின்றன. கப்பலின் உள்ளக முறைமை கடல் சார் பொறியியல் அறிவுடன் தொடர்புபட்ட விடயத்தலைப்புக்கள் மற்றும் செயன்முறை அமர்வுகள் மூலமாக கப்பலின்  நிர்மாண வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் இயக்கம் என்பன சார்பாக அடிப்படை மற்றும் உயர் கப்பல் நிர்மாணிப்புக்கலை விடயத்தலைப்புக்கள் மற்றும் அத்துறையுடன் விசேடமாக தொடர்புபட்ட ஏனைய பல விடயங்கள் ஊடாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவியல்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் கணிதம், முகாமைத்துவம் மற்றும் கணக்கீடு பாடவிடயங்கள் ஊடாக பொறியியலாளரொருவருக்குத் தேவையான முழு அறிவைப் பெற்றுக்கொடுப்பதுடன், கப்பல் துறையில் வழங்கப்படும் ஆறு மாத தொழிற்துறை பயிற்சியானது மாணவர்களுக்கு அவர்களின் செயன்முறை சார் அறிவை விருத்தி செய்வதற்கும் உதவியளிக்கின்றது.

GPA திறமை பெறுமானம் 135 மற்றும் NGPA திறமை பெறுமானம் 15 என்பவற்றைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் பட்டத்தைப் பெறுவதற்குத் தகைமை பெறுவர். அதேவேளை, கடல் சார் பொறியியல் பயிலிளவல் அலுவலர்கள் மேற்குறிப்பிடப்பட்ட தகைமைக்கு மேலதிகமாக, தமது பட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமையை அடைவதற்கு MGPA திறமைப் பெறுமானம் 35 ஈட்டிக்கொள்ளல் வேண்டும். பட்டத்தைப் பெற்றதன் பின்பு சிவில் மாணவர்கள் பயிலிளவல் உத்தியோகத்தர்களாக வாணிப கப்பற்துறை சார்ந்த பிரிவில் சேர்ந்து கொள்வதற்கு அல்லது கடல்சார்ந்த நிறுவனமொன்றில் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதுடன், கடல்சார் பொறியியல் பட்டதாரி பயிலிளவல் உத்தியோகத்தர்கள் இலங்கை கடற் படையில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள்.

எந்திர பொறியியல் திணைக்களத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

எந்திர பொறியியல் திணைக்களமானது, எந்திர பொறியியல் மற்றும் எந்திர மின்னணுவியல் பொறியியல் எனும் இரண்டு வகையான பொறியியல்சார் விஞ்ஞானமாணி விசேட பட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதுடன், மிகப் பரந்தளவான நிபுணத்துவமுடைய உயர் தகைமைபெற்ற விரிவுரையாளர் குழாமை பொறியியல் பீடம் (FOE) பிரதானமாக கொண்டிருப்பதனால், வலுவான பாத்திரமொன்றை நிறைவேற்றிவருவதுடன், அவர்களது கல்வி சார் பின்னனி, கற்பித்தல் அனுபவங்கள், ஆய்வுசார் ஆற்றல்கள் மற்றும் கைத்தொழில்துறை சார் வெளிப்பாடுகள் என்பன கற்கைப் பிரிவின் பலத்திற்கு கணிசமானளவு பங்களிப்புச் செய்கின்றன. வெப்ப இயக்கவியல், பிரயோக எந்திர பொறியியலும் கட்டுப்பாட்டு பொறியியலும் மற்றும் பொருட்கள் சார் சோதனை செய்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமான சிறந்த உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்களை கற்கைப் பிரிவு கொண்டுள்ளது. திணைக்களமானது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தமது பாடத்திட்டத்தை அமுலாக்குவதுடன், விரிவுரை நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் செயன்முறை அமர்வுகளுக்கு மேலதிகமாக மாணவர்களின் அறிவை விருத்தி செய்யவும் வலுவூட்டவும் மேலும் வாய்ப்புக்களை வழங்குவதற்காக கற்கை பிரிவானது கைத்தொழில்துறை சுற்றுலா மற்றும் விசேட அதிதி விரிவுரைகள் என்பவற்றையும் ஒழுங்குசெய்கின்றது.

எந்திர பொறியியல் சார் பி.எஸ்சி. பொறியியல் பட்டம்

எந்திர பொறியியல் திணைக்களமானது, தற்போது நான்கு வருடமும் ஆறு மாதக் காலப்பகுதியைக் கொண்ட இயந்திர பொறியியல் சார் பி.எஸ்சி. பொறியியல் பட்ட நிகழ்ச்சியை வழங்குகின்றது. திணைக்கள உள்ளக கற்கைசார் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக 06 மாத கைத்தொழிற்துறைசார் பயிற்சியும், ஓராண்டு இராணுவ பயிற்சியும் இந் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. போதனை மொழி ஆங்கிலமாகும். திறமை பெறுமான (Credit) அடிப்படையிலான பாடநெறி அலகு முறைக்கேற்ப பாடத்திட்டமானது திருத்தியமைக்கப்பட்டதுடன், 2011 ஆண்டின் ஆரம்பத்தில் தரப் புள்ளி சராசரி (GPA) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதய பாடத்திட்டத்திற்கு ஏற்ப முதலாவது பருவம் எல்லா பொறியியல் மாணவர்களுக்கும் பொதுவானதாகும். எந்திர பொறியியல் சார் பி.எஸ்சி. பொறியியல் பட்ட நிகழ்ச்சியானது, மாறுபட்ட திறமை பெறுமான ஒதுக்கீடுகளுடன் ஒன்பது பருவங்களை உள்ளடக்கியுள்ளது. நிகழ்ச்சித்திட்டத்திற்கான மொத்த GPA திறமை பெறுமானங்களின் எண்ணிக்கை 135 ஆகும். இதற்கு மேலதிகமாக 17 NGPA திறமை பெறுமானங்களும், 35 MGPA திறமைப் பெறுமானங்களும் பட்ட நிகழ்ச்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

            GPA    – தரப் புள்ளி சராசரி

            NGPA – தரப் புள்ளி சராசரி சாரா

            MGPA – இராணுவ தரப் புள்ளி சராசரி

பயிலிளவல் அலுவலர்கள் கொ.பா.ப. இல் கல்வி கற்கும் காலப்பகுதியில் 75% ஐ கல்விசார் செயற்பாடுகளுக்காவும், 25% ஐ இராணுவம் சார் கற்கைச் செயற்பாடுகளுக்காகவும் அர்ப்பணிப்புச் செய்கின்றனர். பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது மற்றும் எட்டவாது பருவங்களின் போது பயிலிளவல் அலுவலர்கள் உயர் இராணுவ பயிற்சிக்காக அவர்கள் சார்ந்த இராணுவ கற்கை நிறுவகங்களுக்கு (அகடமிகளுக்கு) அனுப்பிவைக்கப்படுவதுடன், ஒன்பதாவது பருவமானது கைத்தொழிற்துறைசார் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தரைப் படை, கடற் படை மற்றும் விமானப் படை அணிகளைச் சேர்ந்த பயிலிளவல் அலுவலர்கள் முறையே, தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ அகடமியிலும், திருகோணமலையிலுள்ள கப்பற் படை மற்றும் கடல் சார் அகடமியிலும், சீனக்குடாவிலுள்ள இலங்கை விமானப் படை பயிற்சிக் கல்லூரியிலும் அவர்கள் சார்ந்த உயர் இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வர்கள்.

பாடநெறி பற்றிய தகவல்கள்

பட்டதாரிகள், திறன்கள் மிக்க மின்னணுவியல் பொறியியலாளர்களாக வருவதற்கு சிறந்த வகையில் தயார்படுத்துவதற்காக இயந்திரவியல், இலத்திரனியல், கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்பவை ஒன்றுசேர்க்கப்பட்ட எந்திர மின்னணுவியல் முறைமை பொறியியல் வடிவமைப்புசார் எண்ணக்கருக்கள் பற்றி கற்பிப்பதே நான்கு ஆண்டு பட்டதாரி நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

 • மொத்த GPA திறமை பெறுமானம் : 135
 • மொத்த NGPA திறமை பெறுமானம்:   15
 • மொத்த MGPA திறமை பெறுமானம்:   35

குறிக்கோள்கள்

 • பட்டதாரிகள் எந்திர மின்னணுவியல் முறைமைகள் பற்றிய விசேட அறிவுடன் சேர்த்து விரிவான பொறியியல் கல்வியினைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
 • மாணவர்கள் பொறியியல் சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மிகப் பொருத்தமான தொழில்நுட்ப கலப்புச் சாத்தியங்கள் மற்றும் நியாயங்கள் சார் தெரிவுகளின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்திர மின்னணுவியல் முறைமைக் கோட்பாடுகள் பற்றிய விபரமான புரிந்துணர்வை ஏற்படுத்துதல்.
 • பொறியியல் துறையினுள் பரந்தளவான துறைகள் சார்பாக நுழைவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து, எந்திர மின்னணுவியல், சூழவுள்ள இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், இலத்திரனியல், கட்டுப்பாட்டு பொறியியல் மற்றும் வடிவமைப்பு என்பவற்றை உள்ளடக்கிய எந்திர மின்னணுவியல் பற்றிய பொதுப்படையான கல்வியை வழங்குதல்.
 • இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், இலத்திரனியல் பொறியியல் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் கோட்பாடுகளைப் பிரயோகித்து சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கைத்தொழிற்துறை கேள்வியை எதிர்கொள்ளக் கூடிய திறமையான பட்டதாரிகளை உருவாக்குதல்.

கற்பித்தல் மூலமான பெறுபேறுகள்

 • பொறியியல் சார் சூழ்நிலைகளின் மாதிரி மற்றும் பகுப்பாய்வு தொடர்பாக பொருத்தமான கணிதவியல் முறைகள் மற்றும் பொறியியல் விஞ்ஞானக் கோட்பாடுகளை பிரயோகித்தல்.
 • தற்போதுள்ள பொறியியல் முறைமையினை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பரந்தளவான மூலங்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு ஊடாக புதிய முறைமைகளை உருவாக்குதல்.
 • கைத்தொழில்துறை தேவைப்பாடுகள் சார்பாக சரியான முறையில் திருப்தி செய்யக்கூடிய வகையில் கைத்தொழில்துறைசார் தானியக்கல், உற்பத்தியாக்கல், ஆய்வு மற்றும் அபிவிருத்தி போன்ற துறைகளில் எந்திர மின்னணுவியல் கருத்திட்டங்களை கையாளுதல்.
 • பெறுபேறுகளின் பகுப்பாய்வு மற்றும் அபாயம் சார் மதிப்பீடுகளுடன் மாதிரிகளின் ஊடாக வடிவமைத்தல்.

 மேலும் தகவலுக்கு, பொறியியல் பீடத் இணையதளத்தில் சென்று >>