தொலைநோக்கு

முப்படைகளின் சேவையில், அரசாங்கத்துறையில் மற்றும் உலகலாவிய பிரவேசத்துக்காக மொத்தச் சமூகத்திற்கும் சுகாதார தேவைப்பாடுகளை நிறைவேற்றும் இராணுவ மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்கான அதன் புதுமையான தகுதிக்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அறியப்பட்ட மருத்துவக் கல்லூரியொன்றாக விளங்குதல்.

செயற்பணி

ஆய்வு மற்றும் நீடித்த வாழ்வுக்கான கல்வி ஊடாக பரந்தளவில் மாறுகின்ற துறைகள் மூலம் உயர் ஒழுக்கநெறிகள் மற்றும் மருத்துவ நியமங்கள் சார் நோயாளியை மையப்படுத்திய சிகிச்சை முறைமைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ தொழில்சார் திறன்களையுடைய முன்னோடிகளை உருவாக்குவதாகும்.

பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் தன்மை / மருத்துவ பீடம் / கொ.பா.ப.

பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் தன்மை

பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் காலம் குறைந்தது 14 பாடங்களுடன் 05 வருடங்கள் (10 பருவங்கள்) ஆகும். 14 பாடங்களாவன: உடற்கூற்றியல், உயிர் இரசாயனவியல், உயிர் ஆய்வியல், நுண்ணுயிரியல், ஒட்டுண்ணியியல், நோய்மூல ஆய்வியல், சமூக மருத்துவம், மருந்தாக்கவியல், தடயவியல் மருத்துவம், மருத்துவயியல், சத்திரசிகிச்சையியல், சிறுவர் மருத்துவம், மகப்பேற்று மற்றும் பெண்ணியல், மனநோயியல் என்பனவாகும்.

பிரதான பரீட்சைகள் 4 இருப்பதுடன், அவை வருமாறு:

  • இரண்டாவது MBBS –     உடற்கூற்றியல், உயிர் இரசாயனவியல்,

உயிர் ஆய்வியல்,

  • மூன்றாவது MBBS பகுதி 1 –     நுண்ணுயிரியல், ஒட்டுண்ணியியல்
  • மூன்றாவது MBBS பகுதி 11 –     நோய்மூல ஆய்வியல், சமூக மருத்துவம்,

மருந்தாக்கவியல், தடயவியல் மருத்துவம்

  • இறுதி MBBS –     மருத்துவயியல், சத்திரசிகிச்சையியல், சிறுவர்

மருத்துவம், மகப்பேற்று மற்றும் பெண்ணியல், மனநோயியல்

சிகிச்சை சார் பயிற்சிகள்:

இரண்டாவது MBBS பூர்த்தி செய்ததன் பின்னர், மூன்றாவது ஆண்டில் சிகிச்சை சார் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுவதுடன், அது இறுதியாண்டு முடியும் வரை தொடரும்.

ஆரம்பத்தில் MMS தமது சிகிச்சைசார் பயிற்சிகளை பின்வரும் வைத்தியசாலைகளில் சுகாதார அமைச்சின் ஆதரவுடன் தொடங்கியதுடன், இலங்கை மருத்துவ சபையின் மூலம் மருத்துவ மாணவர்களை பயிற்றுவிப்பதற்குத் தேவையான சகல வசதிகளுடன் அமையப்பெற்ற 1000 கட்டில்களைக் கொண்ட போதனா வைத்தியசாலையை வேறஹெர பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் கொ.பா.ப. ஈடுபட்டுள்ளது.

தெரிவு செய்தல் விதிமுறைகள் / மருத்துவ பீடம் / கொ.பா.ப.

மருத்துவக் கற்கைக்கு பயிலிளவல் அலுவலர்களை தெரிவு செய்யும் விதிமுறைகள்

கொ.பா. பல்கலைக்கழகத்திற்கு பயிலிளவல் அலுவலர்களை தெரிவு செய்யும் முறையானது, இலங்கையிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து வேறுபட்டதாகும். முப்படை சேவைகளினதும் கேள்விக்கேற்ற வகையில் தரமான சமநிலை தன்மை கொண்ட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியில் அது ஈடுபடுகின்றது. MMS தொடர்பாக தெரிவு செய்தல் ஏனைய பட்டப் பாடநெறிகளுக்காக கொ.பா.ப. மூலம் குறிப்பிடப்பட்டுள்ள அனுமதி பெறும் விதிமுறைகளுக்கு ஒத்திசைவானதாக இருப்பதுடன், ஏனைய மருத்துவக் கல்லூரிகளுக்கு வேண்டப்படும் Z-புள்ளிகள் முப்படையை சேர்ந்தவர்களுக்குத் தேவையான மேலதிக விதிமுறைகளோடு பிரயோகிக்கதக்க வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலதிக விதிமுறைகளில் பெளதிக அம்சங்கள் சார்ந்த தகைமைகளும் உள்ளடக்குகின்றன.

கட்டடம் பூர்த்திசெய்யப்பட்டதன் பின்னர் மற்றும் தேவைப்பாடுகள் சார் வழங்கல் தடைகள் நீங்கியதன் பின்னர் ஆண் – பெண் பால் சமநிலை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளும் கொள்கையை நடைமுறைப்படுத்த கொ.பா.ப. விருப்பம் கொண்டுள்ளது. ஆரம்ப நடவடிக்கையாக கொ.பா.ப. இன் மருத்துவ பீட (FOM) 30 ஆவது உள்வாங்கலின் போது பெண் பயிலிளவல் அலுவலர்களை சேர்த்துக்கொள்ள இருக்கின்றது.

மேலும் விவரங்களுக்கு மருத்துவ பீட இணையதளத்தில் வருகை >>