உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

முகாமைத்துவ சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானுடவியல் பீடம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டது. இது முகாமைத்துவம் மற்றும் நிதி திணைக்களம், சமூக விஞ்ஞானங்கள் திணைக்களம் மற்றும் மொழிகள் திணைக்களம் எனும் மூன்று திணைக்களங்களைக் கொண்டுள்ளது.

முகாமைத்துவம் மற்றும் நிதி திணைக்களமானது, தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம்சார் பி.எஸ்சி. மற்றும் முகாமைத்துவமும் தொழில்நுட்ப விஞ்ஞானங்களும்சார் பி.எஸ்சி. எனும் இரண்டு பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குகின்றது. தற்போது இப்பீடத்தின் பீடாதிபதியாக கலாநிதி எம்.எம் ஜயவர்தன அவர்கள் பணியாற்றுகின்றார். இதுவரை பீடத்திற்கு மூன்று உள்வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 200 இற்கும் மேற்பட்ட பட்டதாரி மாணவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் உள்ளனர். பட்டதாரி மாணவர்களில் அதிகமானோர் பயிலிளவல் அலுவலர்களாக கற்கைச் செயற்பாடுகளில் ஈடுபடும் அதேவேளை, நாள்முறை பட்டதாரி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் குறிப்பிட்டளவு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். பீடமானது 25 கற்கைசார் பணியாளர் அங்கத்தவர்களை கொண்டுள்ளது. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களை விடவும் பிரபல்யமானதாக விளங்கச் செய்வதற்கு இப் பீடமானது பாரிய பங்களிப்பை செய்கின்றது.

பட்டதாரி நிகழ்ச்சித்திட்டங்கள்

சமூக விஞ்ஞானங்கள் சார் பி.எஸ்சி. பட்டம்

சமூக விஞ்ஞானங்கள்சார் பி.எஸ்சி. பட்ட நிகழ்ச்சித்திட்டம் 2011 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக விஞ்ஞானங்கள் சார் பட்டதாரிகள், அவர்களின் பட்டப் படிப்பினை பூர்த்திசெய்ததன் பின்பு எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காணும் வகையில் செயலாற்றுவதை இப் புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது. பட்டத்தின் பெயர் அதேபோல், பாடத்திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் என்பன, பட்டதாரிகள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறைவேற்றுப் பணியாளர்களாக/முகாமையாளர்களாக கடமையாற்றுவதற்கான தகைமையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ளன. பட்டதாரிகள் தொழிலில் அமர்ந்ததன் பின்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு உதவிபுரியத் தேவையான அறிவு மற்றும் திறன்களை பெற்றுக்கொடுத்தலுடன் சம்பந்தப்பட்ட பாடவிடயங்களும் கைத்தொழிற்துறைசார் பயிற்சியும் புதிய பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க

முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானங்கள் சார் பி.எஸ்சி. பட்டம்

பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் நாள்முறை மாணவர்கள் ஆகியோர்களுக்காக முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானங்கள் பற்றிய பி.எஸ்சி. பட்டம் வழங்கப்படுகின்றது. முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகள் ஆகிய இரண்டு தொடர்பாக சிறப்பாகவும் அறிவுபூர்வமாகவும் பணிகளை நிறைவேற்றும் ஆற்றல் சார்ந்த நிறைவேற்றுநர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உயர் குணாம்சம் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதே இந் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். நிகழ்ச்சித்திட்டமானது 3 ஆண்டு காலப்பகுதியைக் கொண்டதுடன், ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க

தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் பற்றிய பி.எஸ்சி. பட்டம்

தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் பற்றிய பி.எஸ்சி. பட்ட நிகழ்ச்சித்திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது. விநியோக தொடர் முகாமைத்துவம், போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் கணக்கியல் எனும் மூன்று விசேட பிரிவுகளின் கீழ் பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் சிவில் பட்டதாரி மாணவர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இந் நிகழ்ச்சித்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டமானது 3 ஆண்டு காலப்பகுதியைக் கொண்டதுடன், ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க

தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் சார் விஞ்ஞானமாணி பட்டம்.

போக்குவரத்து, விநியோக தொடர் முகாமைத்துவம் மற்றும் கணக்கீடு ஆகிய மூன்று பிரிவுகள் சார்பாக பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இராணுவ மற்றும் இராணுவமல்லாத (சிவில்) மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட விசேட பாடநெறியான இது, தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் தொடர்பாக மேலதிக அறிவையும் திறன்களையும் மற்றும் தீவிரமான போர் நிலைமைகளில் மிக முக்கியமான தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு சார் பிரச்சினைகளின் போது தலைமைவகித்தல் மற்றும் முகாமைசெய்தல் சம்பந்தமாக மூலாதாரமான திறமையைப் பெற்று, ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவ பயிலிளவல் உத்தியோகத்தர்களாக அவர்களின் திறமைகளை வழங்குவதற்காக ஆகும். இராணுவமல்லாத (சிவில்) மாணவர்களின் வெற்றிக்கான தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு சார் முகாமைசெய்தல் திறன்களை அவர்களுக்கு வழங்குகின்றது.

காலப்பகுதி                : 3 ஆண்டுகள்

யாருக்கானது            : பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் நாள்முறை மாணவர்கள்.

முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானங்கள் சார் பி.எஸ்சி. பட்டம்.

இராணுவ மாணவர்கள் முப்படைகளிலும் ஏவுநர் உத்தியோகத்தர்களாக சேவையாற்றுவதற்காகவும், சிவில் மாணவர்கள் தொழில்நுட்பத் துறைகளில் திறன்வாய்ந்த முகாமையாளர்களாக கைத்தொழிலில் தலைமை வகிப்பதற்காகவும் அவர்களுக்குத் தேவையான திறமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட பாடநெறியாகும்.

காலப்பகுதி                : 3 ஆண்டுகள்

யாருக்கானது            : பயிலிளவல் அலுவலர்கள் மற்றும் நாள்முறை மாணவர்கள்

 

பாடத்திட்டம்

பட்ட நிகழ்ச்சித்திட்டம்        : சமூக விஞ்ஞானங்கள் சார் பி.எஸ்சி. பட்டம்

காலப்பகுதி                            : 3 ஆண்டுகள்

போதனை மொழி                 : ஆங்கிலம்

பட்டப் பாடநெறியில் இணைந்து கொள்வதற்கான முன் தகைமைகள்

க.பொ.த. (உ/த) பரீட்சையில் புவியியல், வணிகப் புள்ளிவிபரவியல், பொருளியல், அளவையியலும் விஞ்ஞான முறைமையும், வரலாறு, தொடர்பாடலும் ஊடகக் கற்கையும், ஆங்கிலம் (பாட இல. 73), பொது தகவல் தொழில்நுட்பம், கணிதம், அரசியல் விஞ்ஞானம், வியாபாரக் கற்கைகள், சிங்களம்/தமிழ் ஆகிய பாடங்களுள் குறைந்தது இரண்டு (02) பாடங்களில் சித்திகளுடன், மூன்று (03) பாடங்களில் சித்திகளைப் பெற்ற விண்ணப்பதாரிகள் பி.எஸ்சி. பட்டப் பாடநெறிக்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவர். மேற்படி தகைமைகளுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக சமூக விஞ்ஞானங்கள் சார் பி.எஸ்சி. பாடநெறியைக் கற்பதற்கு இணைந்து கொள்ள விரும்பும் பயிலிளவல் அலுவலர்களுக்காக மூன்று நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்படுவதுடன், அவர்கள் ஆயுதப் படைகளில் சேவையாற்றுவதற்கான தகைமைகள் இருப்பதை வெளிக்காட்டுதல் வேண்டும். கட்டணம் செலுத்தும் அடிப்படையில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், ஏனைய பட்ட நிகச்சித்திட்டங்களுக்கு போலவே விண்ணப்பதாரிகள் பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை பயிலுவதற்குரிய ஆற்றல் உண்டென்பதை உறுதிப்படுத்துவதற்கான கொ.பா.ப. இன் நுண்ணறிவுப் பரீட்சை மற்றும் பொதுவான நேர்முகப் பரீட்சைகளிலும் பங்குபற்றி தேர்ச்சியடைதல் வேண்டும்.

பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை கற்பதனால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

சமூக விஞ்ஞானங்கள் சார் பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்யும் மாணவர்கள் பின்வரும் ஆற்றல்களை பெற்றுக்கொள்வார்கள்.

  • அவர்கள் வாழும் சூழலில், நாட்டில், பிராந்தியத்தில் மற்றும் உலகலாவிய ரீதியில் உள்ள சமூக – பொருளாதார பிரச்சினைகளை இனங்காணுவதற்கான அடிப்படைசார் அறிவைப் பயன்படுத்துதல்.
  • சமூக – பொருளாதார பிரச்சினைகளை மீள விவரிக்கும் போது ஏனைய துறைகளின் உதவியுடன் அவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு சாதனங்களைப் பயன்படுத்துதல் மற்றும் அவர்கள் வாழுகின்ற சூழலின் சமூக – பொருளாதார அபிவிருத்திகளுக்கு பங்களிப்புச் செய்தல்.
  • பல்துறைகள் சார் குழுவின் அங்கத்தவராக திறன்மிக்க வகையில் செயலாற்றுதல்.
  • சமூக  விஞ்ஞானங்கள் சார் துறைகளில் சுயாதீனமாக கற்பதற்குத் தேவையான திறன்களை வெளிக்காட்டுதல்.

மேலும் தகவலுக்கு, இணையதளத்தில் சென்று >>