மும்மொழியிலான இணையத்தளமாக பல்கலைக்கழக இணையத்தளத்தை அமைத்தல்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மும்மொழி இணையத்தளமாக மீழமைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இணைக் கடற்படைத்தளபதி ஜே.ஜே ரணசிங்க அவர்களால் 01.03.2017 அன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஆகவே இணையத்தளத்தின் அனைத்து தகவல்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பரப்பப்படும். இலங்கையின் மூன்று பிரதான மொழிகளிலும் பல்கலைக்கழகத்தின் தகவல்களை தேடுவதற்கும் அறிந்து கொள்வதற்கும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை அமைப்பதன் நோக்கம் நாட்டின் தேசிய மொழிக் கொள்கையை பின்பற்றுவதும் பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய தகவல்களை சரியாகவும் சிறப்பாகவும் அறிந்து கொள்வதற்கு பரந்தளவான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *