1. வழங்கப்படும் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்

 

  கட்டணம் செலுத்துதல் அடிப்படையிலான பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்

 1. பி.எஸ்சி. மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள்
 2. பி.எஸ்சி. மருந்தகவியல்
 3. பி.எஸ்சி. இயன்மருத்துவம்
 4. பி.எஸ்சி. ஊடுகதிர்ப்படமெடுப்பு சார்
 5. பி.எஸ்சி. தாதியியல்

 

  கட்டணமற்ற அடிப்படையிலான பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்

 • பி.எஸ்சி. தாதியியல்

 

2. அடிப்படை தேவைப்பாடுகள்

 

 • இலங்கைப் பிரசையொருவராக இருத்தல் வேண்டும்.
 • விண்ணப்ப முடிவு திகதியன்று 18 – 24 வயதுக்குற்பட்டவராக இருத்தல் வேண்டும்.  
 • விண்ணப்பதாரிகள் 04 அடி, 10 அங்குலத்திற்கு (4’10’’) குறையாதவராக இருத்தல் வேண்டும்.
 • பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையுடன் பின்வரும் தேவைப்பாடுகளையும் பூர்த்திசெய்தல் வேண்டும்:

 

                        –          நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் உயிரியல் அல்லது கணிதப் பிரிவு பாடங்களில் ஏதேனும் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

          சாதாரண பொதுப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும்.

 

          க.பொ.த. (சா./த.) பரீட்சையில் ஆங்கில மொழி பாடத்தில் குறைந்தபட்சம் திறமை (C) சித்தியை கொண்டிருத்தல் வேண்டும்.

 • அல்லது

          இலண்டன் உயர் தரத்திற்கு (London A/Ls) (Cambridge அல்லது Edexcel) சமமான தகைமையை அல்லது ஏனைய சமமான வெளிநாட்டு பரீட்சைத் தகைமையை பெற்றிருத்தல்.

 • அல்லது

          ஏனைய நாட்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் சமமான தகைமையை கொண்டிருத்தல்.

 

 • பின்வரும் குறைந்தபட்ச கல்வித் தகைமைகளைத் திருப்திப்படுத்துதல் வேண்டும்:
 • விண்ணப்பதாரிகள் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள் சார் பி.எஸ்சி. மற்றும் மருந்தகவியல் சார் பி.எஸ்சி. பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை பயிலுவதற்கு, க.பொ.த. (உ./த.) பரீட்சையில் இரசாயனவியல் பாடத்தில் திறமை (C) சித்தி அல்லது அதற்கு கூடிய சித்தியையும், இயன்மருத்துவம் சார் பி.எஸ்சி. மற்றும் ஊடுகதிர்ப்படமெடுப்பு சார் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பயிலுவதற்கு க.பொ.த. (உ./த.) பரீட்சையில் பௌதிகவியல் பாடத்தில் திறமை (C) சித்தி அல்லது அதற்கு கூடிய சித்தியையும் பெற்றிருத்தல் வேண்டும்.

 

ஏனைய தேவைப்பாடுகள்:

 • “உயர் பாடசாலை திப்ளோமா தகைமையுடன் விண்ணப்பிக்கும் அபேட்சகர்கள் SAT மற்றும் TOFEL பரீட்சையில் குறைந்தபட்சம் 550 புள்ளிகள் அல்லது IELTS தேர்வில் குறைந்தபட்சம் 6.5 தரப்புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
 • “ஏனைய ஏதாவதொரு வெளிநாட்டு பரீட்சையில் அல்லது ஏனைய ஏதாவதொரு நாட்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் சமமான தகைமை” எனும் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் அபேட்சகர்களுக்கு இலங்கையின் க.பொ.த. (உ./த.) பரீட்சைக்கு சமமான ஏதேனும் வெளிநாட்டு பரீட்சையில் உரிய குறைந்தபட்ச தகைமையை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் மூலம் உறுதிப்படுத்துதலை பெற்றுக்கொள்ளல் வேண்டும். மேலும், விண்ணப்பதாரியின் மூலம் அவரது தகைமை பெற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்/ அகடமியின்/ உயர் கல்வி நிறுவகத்தின் உரிய தகைமையானது பல்கலைக்கழகமொன்றில்/ அகடமியொன்றில்/ உயர் கல்வி நிறுவகத்தில் இளமாணி பட்டத்தை வழங்கும் பட்டதாரிப் பாடநெறியை பயிலுவதற்கான பதிவை மேற்கொள்ள போதுமானது என உறுதிப்படுத்தப்பட்ட கடிதமொன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

3. பாடநெறிகளுக்கான கட்டணங்கள்

பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம்

முழுமையான கட்டணம்

தவணை அடிப்படையில் (தவணை மூலம்)

பி.எஸ்சி. மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானங்கள்

இலங்.ரூ.  700,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. இயன்மருத்துவம்

இலங்.ரூ.  700,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. மருந்தகவியல்

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. ஊடுகதிர்ப் படமெடுப்புசார்

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. தாதியியல்

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

 

 

நாள்முறை மாணவர்களுக்கான கற்கைசார் கடன் திட்டம்


 

1. பீடங்கள் மற்றும் வழங்கப்படும் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்

 

 • பொறியியல் பீடம்
 1. பி.எஸ்சி. விமானம் சார் பொறியில்
 2. பி.எஸ்சி. விமானப் பராமரிப்பு சார் பொறியியல்
 3. பி.எஸ்சி. உயிரியல் மருத்துவம் சார் பொறியியல்
 4. பி.எஸ்சி. குடிசார் பொறியியல்
 5. பி.எஸ்சி. மின் மற்றும் இலத்திரனியல் சார் பொறியியல்
 6. பி.எஸ்சி. இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு சார் பொறியியல்
 7. பி.எஸ்சி. கடல் சார் பொறியியல்
 8. பி.எஸ்சி. இயந்திரம் சார் பொறியியல்
 9. பி.எஸ்சி. இயந்திர மின்னணுசார் பொறியியல்
 10. பி.எஸ்சி. கணினி விஞ்ஞானம் சார்
 11. பி.எஸ்சி. தகவல் மற்றும் தொடர்புகொள்ளல் தொழில்நுட்பம் சார்

 

 • சட்ட பீடம்
 1.  சட்ட இளமாணி (எல்.எல்.பி)

 

 • முகாமைத்துவம், சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானிடவியல் பீடம்
 1. பி.எஸ்சி. தேவை விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம்
 2. பி.எஸ்சி. முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார் அறிவியல்
 3. பி.எஸ்சி. சமூக விஞ்ஞானங்கள் சார்

 

2. அடிப்படை தேவைப்பாடுகள்

 

 • இலங்கைப் பிரசையொருவராக இருத்தல் வேண்டும்.
 • விண்ணப்ப முடிவு திகதியன்று, சட்ட இளமாணி (எல்.எல்.பி.) பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கான வயது 17 – 30 வருடங்களுக்கு இடைப்பட்டதாகவும், ஏனைய பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான வயது 17 – 24 வருடங்களுக்கு இடைப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
 • ஏனைய பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு க.பொ.த. (சா./த.) பரீட்சையில் ஆங்கில மொழி பாடத்தில் திறமை (C) சித்தி அல்லது அதைவிடக் கூடியதை அல்லது இலண்டன் சாதாரண தரத்தில் (London O/L) அல்லது ஏனைய ஏதாவது அதற்கு சமமான வெளிநாட்டு பரீட்சையில் திறமை (C) சித்தி அல்லது அதைவிடக் கூடியதை பெற்றிருத்தல் வேண்டும்.
 • சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் குறைந்தபட்சம் சாதாரண (S) சித்திகள் மூன்று பெற்றிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையைப் பெற்றிருத்தல் அல்லது இலண்டன் உயர் தரத்திற்கு (London A/L) (Cambridge or Edexcel) சமமான தகைமையை அல்லது ஏனைய சமமான வெளிநாட்டு பரீட்சைத் தகைமையை பெற்றிருத்தல்.

ஏனைய தேவைப்பாடுகள்:

 • “உயர் பாடசாலை திப்ளோமா தகைமையுடன் விண்ணப்பிக்கும் அபேட்சகர்கள் SAT மற்றும் TOFEL பரீட்சையில் குறைந்தபட்சம் 550 புள்ளிகள் அல்லது IELTS தேர்வில் குறைந்தபட்சம் 6.5 தரப்புள்ளிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
 • “ஏனைய ஏதாவதொரு வெளிநாட்டு பரீட்சையில் அல்லது ஏனைய ஏதாவதொரு நாட்டின் பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் சமமான தகைமை” எனும் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் அபேட்சகர்களுக்கு இலங்கையின் க.பொ.த. (உ./த.) பரீட்சைக்கு சமமான ஏதேனும் வெளிநாட்டு பரீட்சையில் உரிய குறைந்தபட்ச தகைமையை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்படுகின்றது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் மூலம் உறுதிப்படுத்துதலை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், விண்ணப்பதாரியின் மூலம் அவரது தகைமை பெற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின்/ அகடமியின்/ உயர் கல்வி நிறுவகத்தின் உரிய தகைமையானது பல்கலைக்கழகமொன்றில்/ அகடமியொன்றில்/ உயர் கல்வி நிறுவகத்தில் இளமாணி பட்டத்தை வழங்கும் பட்டதாரிப் பாடநெறியை பயிலுவதற்கான பதிவை மேற்கொள்ள போதுமானது என உறுதிப்படுத்தப்பட்ட கடிதமொன்று சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
 • பின்வரும் குறைந்தபட்ச கல்வித் தகைமைகளைத் திருப்திப்படுத்துதல் வேண்டும்.
 • பொறியியல் சார் விஞ்ஞான இளமாணி – 4 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் கணிதப் பிரிவில் இரசாயனவியல், பௌதிகவியல் மற்றும் இணைந்த கணிதம் ஆகிய பாடங்களில் ஏதேனும் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

 • சட்ட இளமாணி (LLB) – 4 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் பின்வரும் பாடங்களில் ஏதேனும் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.
கணக்கீடு, புவியியல், வணிகப் புள்ளிவிபரவியல், இரசாயனவியல், சிங்களம்/தமிழ், ஜேர்மன், பாளி, அரபு, பௌத்த சமயம், நாடகமும் அரங்கியலும், இந்து சமயம், கணிதம்/இணைந்த கணிதம், அரசியல் விஞ்ஞானம், உயிரியல், வரலாறு, பொருளியல், ஆங்கிலம் (பாட இல.73), ஜப்பானிய மொழி, சமஸ்கிருதம், விவசாயத் தொழில்நுட்பவியல், சீன மொழி, கிரேக்கம், இந்து நாகரிகம், விவசாய விஞ்ஞானம், வணிகக் கற்கைகள், பௌதிகவியல், அளவையிலும் விஞ்ஞான முறையும், இலத்தின், கிறிஸ்தவம், பௌத்த நாகரிகம், பிரெஞ்சு, கிரேக்க உரோம நாகரிகம், தொடர்பாலும் ஊடகக்கற்கையும், இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்.

 • தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார் விஞ்ஞான இளமாணி – 4 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் ஏதாவதொரு பாடப் பிரிவில் எவையேனும் பாடங்களில் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

 

 • கணினி விஞ்ஞானம் சார் விஞ்ஞான இளமாணி – 4 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் கணிதப் பிரிவில் (இரசாயனவியல், பௌதிகவியல், இணைந்த கணிதம், உயர் கணிதம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்) ஆகிய பாடங்களில் ஏதேனும் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

 

 • முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானங்கள் சார் விஞ்ஞான இளமாணி – 3 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் உயிரியல் மற்றும் கணிதப் பிரிவுகளில் அல்லது வணிகப் பிரிவில் (கணக்கீடு, பொருளியல் மற்றும் வணிகப் புள்ளிவிபரவியல்) ஆகிய பாடங்களில் ஏதேனும் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

 

 • தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவத்தில் விஞ்ஞான இளமாணி – 3 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் உயிரியல், கணிதம் அல்லது வணிகப் பிரிவில் எவையேனும் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

 

 • சமூக விஞ்ஞானங்கள் சார் விஞ்ஞான இளமாணி – 3 ஆண்டுகள்

நடப்பு ஆண்டில் அல்லது அதற்கு உடனே முந்திய ஆண்டில் க.பொ.த. (உ./த.) பரீட்சையில் ஏதாவது பாடப் பிரிவில் மூன்று (03) சித்திகளை கொண்டிருத்தல் மற்றும் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைக் (YES) கொண்டிருத்தல்.

 

3. பாடநெறிகளுக்கான கட்டணம்

பட்டப்படிப்பு
நிகழ்ச்சித்திட்டம்

முழுமையான கட்டணம்

தவணை அடிப்படையில் (தவணை மூலம்)

பி.எஸ்சி. பொறியியல்

இலங்.ரூ.  1,600,000/-

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  500,000/-

இலங்.ரூ.  500,000/-

சட்ட இளமாணி (LLB)

இலங்.ரூ.  850,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  250,000/-

பி.எஸ்சி. கணினி விஞ்ஞானம்

இலங்.ரூ.  800,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் சார்

 

இலங்.ரூ.  500,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானங்கள் சார்

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

இலங்.ரூ.  200,000/-

பி.எஸ்சி. தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம்

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  150,000/-

இலங்.ரூ.  150,000/-

பி.எஸ்சி. சமூக விஞ்ஞானங்கள்

இலங்.ரூ.  600,000/-

இலங்.ரூ.  300,000/-

இலங்.ரூ.  150,000/-

இலங்.ரூ.  150,000/-

 

 

நாள்முறை மாணவர்களுக்கான கடன் திட்டம்


1. வழங்கப்படும் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்

 

கட்டியெழுப்பட்ட சுற்றாடல் மற்றும் இடஞ்சார்ந்த விஞ்ஞானங்கள் பீடம்.

 1. கட்டடக்கலையில் இளமாணிப் பட்டம்.
 2. கட்டியெழுப்பப்பட்ட சுற்றாடல் மற்றும் இடஞ்சார்ந்த விஞ்ஞானங்கள் சார் விஞ்ஞான இளமாணி கௌரவ பட்டம்.
 3. இளமாணி கட்டியெழுப்பப்பட்ட சுற்றாடல் சார் விஞ்ஞான இளமாணிப் பட்டம்.
 4. கணிய அளவையியல் சார் விஞ்ஞான இளமாணி கௌரவ பட்டம்.
 5. அளவையியல் விஞ்ஞானம் சார் விஞ்ஞான இளமாணி கௌரவ பட்டம்.

 

2. அடிப்படை தேவைப்பாடுகள்

கட்டடக்கலையில் இளமாணிப் பட்டம் – ஐந்து ஆண்டுகள்,

கட்டியெழுப்பப்பட்ட சுற்றாடல் சார் விஞ்ஞான இளமாணி கௌரவ பட்டம் – நான்கு ஆண்டுகள்,

கட்டியெழுப்பப்பட்ட சுற்றாடல் சார் விஞ்ஞான இளமாணிப் பட்டம் – மூன்று ஆண்டுகள்

 

அனுமதிக்கான தகைமையை பெறுவதற்கு விண்ணப்பதாரிகள் கீழே குறிப்பிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் சாதாரண (S) சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் பின்வரும் பாடங்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எடுத்திருத்தல் வேண்டும்: உயிரியல், உயர் கணிதம், பௌதிகவியல், இணைந்த கணிதம், சித்திரக்கலை, புவியியல் மற்றும் பின்வரும் நிரலிலிருந்து ஏனைய பாடத்தை/பாடங்களை கற்றிருத்தல் வேண்டும்:
கணக்கீடு, ஹிந்தி, அரபு, இந்து நாகரிகம், பௌத்த நாகரிகம், வரலாறு, வணிகப் புள்ளிவிபரவியல், மனைப் பொருளியல், வணிகக் கற்கைகள், இஸ்லாமிய நாகரிகம், சீன மொழி, ஜப்பானிய மொழி, கிரேக்க உரோம நாகரிகம், அளவையிலும் விஞ்ஞான முறையும், அரசியல் விஞ்ஞானம், கணிதம், பாளி, ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, சிங்களம், ஜேர்மன், தமிழ், கிறிஸ்தவ நாகரிகம், தொடர்பாலும் ஊடகக்கற்கையும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் மற்றும் பொருளியல்.
இதற்கு மேலதிகமாக விண்ணப்பதாரிகள் பின்வரும் தேவைப்பாடுகளையும் பூர்த்திசெய்தல் வேண்டும்:
க.பொ.த. (சா./த.) பரீட்சையில் கணிதம் I அல்லது II பாடத்தில் குறைந்தபட்சம் திறமை (C) சித்தியை அல்லது க.பொ.த. (உ./த.) பரீட்சையில் கணிதப் பாடத்தில் சாதாரண (S) சித்தியை பெற்றிருத்தல் வேண்டும். c) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் “இடஞ்சார்ந்த அறிவு மதிப்பாய்வில்” (Assessment of Spatial Cognition) சித்தி பெறுதல் வேண்டும்.

 

கணிய அளவையியல் சார் விஞ்ஞான இளமாணி கெளரவ பட்டம் – நான்கு ஆண்டுகள்

கணிய அளவையியல் பாடநெறி சம்பந்தப்பட்ட அனுமதிக்கான தகைமையைப் பெறுவதற்கு விண்ணப்பதாரிகள் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் சாதாரண (S) சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரிகள் பின்வரும் பாடங்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது எடுத்திருத்தல் வேண்டும்:
இணைந்த கணிதம் உயர் கணிதம்

மற்றும் பின்வரும் நிரலிலிருந்து ஏனைய பாடத்தை/பாடங்களை எடுத்திருத்தல் வேண்டும்:
கணக்கீடு பொருளியல் வணிகப் புள்ளிவிபரவியல் வணிகக் கற்கைகள் பௌதிகவியல் இரசாயனவியல்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்
இதற்கு மேலதிகமாக விண்ணப்பதாரிகள் க.பொ.த. (சா./த.) பரீட்சையில் பின்வரும் தேவைப்பாடுகளையும் பூர்த்திசெய்தல் வேண்டும்:
அ. கணிதம் I அல்லது II பாடத்தில் குறைந்தபட்சம் திறமை (C) சித்தி.
ஆ. விஞ்ஞானம் I அல்லது II பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண (S) சித்தி.
இ. ஆங்கில மொழி பாடத்தில் குறைந்தபட்சம் திறமை (C) சித்தி.

விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் க.பொ.த. (சா./த.) மூலச்சான்றிதழின் உரியவாறு அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியையும் (Certified copy) சமர்ப்பித்தல் வேண்டும். இதைச் சமர்ப்பிக்கத் தவறினால், கணிய அளவையியல் பாடநெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.


அளவையியல் விஞ்ஞானங்கள் சார் விஞ்ஞான இளமாணி கெளரவ பட்டம் – நான்கு ஆண்டுகள்

அளவையியல் விஞ்ஞானங்கள் சார் பாடநெறி சம்பந்தப்பட்ட அனுமதிக்கான தகைமையைப் பெறுவதற்கு விண்ணப்பதாரிகள், க.பொ.த. (உ./த.) பரீட்சையில் பௌதிகவியல், இணைந்த கணிதம் மற்றும் வேறு ஏதாவதொரு பாடத்திலும் குறைந்தபட்சம் சாதாரண (S) சித்திகளைப் பெற்றிருத்தல்   வேண்டும்.

 

பாடநெறிக் கட்டணங்கள்

 

பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம்

முழுமையான கட்டணம்

கட்டடக்கலையில் இளமாணிப் பட்டம்

இலங்.ரூ.  1,900,000/-

கட்டியெழுப்பப்பட்ட சுற்றாடல் சார் விஞ்ஞான இளமாணி கெளரவ பட்டம்

இலங்.ரூ.  1,500,000/-

கட்டியெழுப்பப்பட்ட சுற்றாடல் சார் விஞ்ஞான இளமாணி

இலங்.ரூ.  1,125,000/-

கணிய அளவையியல் சார் விஞ்ஞான இளமாணி கெளரவ பட்டம்

இலங்.ரூ. 1,500,000/-

அளவையியல் விஞ்ஞானம் சார் விஞ்ஞான இளமாணி கெளரவ பட்டம்

இலங்.ரூ. 1,500,000/-