கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு தகைமைகளுடன் சார்க் (SAARC) அங்கத்துவ நாடுகள் உட்பட நட்பு நாடுகளின் மாணவர்களுக்கு பின்வரும் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் வழங்ப்படுகின்றது..

  • மருத்துவம் மற்றும் சத்திரசிகிச்சையியல் இளமாணி (MBBS)
  • விஞ்ஞான இளமாணி (பி.எஸ்சி.) குடி சார்/ இயந்திரம் சார்/ மின் மற்றும் இலத்திரனியல் சார்/  இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்/ கடல் சார்/ விமானம் சார் – பொறியில்
  • விஞ்ஞான இளமாணி (பி.எஸ்சி.) தகவல் மற்றும் தொடர்புகொள்ளல் தொழில்நுட்பம் சார்
  • சட்ட இளமாணி (எல்.எல்.பி)
  • விஞ்ஞான இளமாணி (பி.எஸ்சி.) தேவை விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம்
  • விஞ்ஞான இளமாணி (பி.எஸ்சி.) சமூக விஞ்ஞானங்கள் சார்

தகைமை பெறுவதற்கான தேவைப்பாடுகள்

இலண்டன் உயர் தரத்திற்கு (London A/L) சமமான அல்லது உரிய துறை சார்ந்த இளமாணிப் பட்டமொன்றைப் பெறுவதற்காக பட்டதாரிக் கற்கையொன்றைப் பயிலுவதற்கு அந் நாட்டு பல்கலைக்கழகத்திற்கு அனுமதிபெறத் தேவையான தகைமைகளை கொண்டிருத்தல்.
விண்ணப்பதாரிகள் தேவையான சகல சித்திகளையும் ஒரே அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட பரீட்சைகள் சபையின் கீழ் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரிகள் Scholastic Aptitude Test (SAT) தேர்வு மற்றும் Test of English as a Foreign Language (TOEFL) தேர்வு என்பவற்றில் சித்தியடைந்திருத்தல் அல்லது கொத்தலாவல
பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு தகைமைகளை பெற்றிருத்தல் வேண்டும்.