தொலைநோக்கு

முப்படைகளுக்கும் அரசாங்கத்துறைக்கும் பாரியதாக சமூகத்திற்கும் சிறப்பாகச் சேவையாற்றுகின்ற விசேடமானதும், ஒழுக்காற்றுகளுக்கு இடையிலானதுமான பாதுகாப்புத் தொடர்பான உயர் கல்வியில் பட்டப்படிப்பு மாணவர்களையும் பட்டதாரி மாணவர்களையும் ஈடுபடுத்துவதற்கான அதன் புதுமையான தகுதிக்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அறியப்பட்ட பல்கலைக்கழகமொன்றாக விளங்குதல்.

செயற்பணி

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் செயற் பணியானது பாதுகாப்பு தொடர்பான துறைசார் கற்கைகள் பலவற்றின் மூலம் தரமான ஆய்வுகளுடன் பட்டதாரி மாணவர்கள், பட்டப்படிப்பு மற்றும் தொழில்சார் நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக உயர் தரத்திலான, மாணவர்களை மையப்படுத்திய, கல்விசார் அனுபவத்தை பல்கலைக்கழகத்தினுள் வதிவிட மற்றும் வதிவிடமற்ற எனும் இரு முறையிலும் உறுதிப்படுத்துதல் ஆகும்.

 

நோக்கங்கள்

.    பயிலிளவல் அலுவலர்களை ஆயுதப் படைப்பிரிவுகளுக்கு இணைப்புச் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியினை அறிமுகப்படுத்துவதற்கு வசதியை ஏற்படுத்துதல் மற்றும் தமது தொழில் சம்பந்தமான அவர்களது அறிவினையும் திறன்களையும் விருத்தி செய்வதற்கான வழிகாட்டலை வழங்குதல்.

.   பயிலிளவல் அலுவலர்களுக்கு, அதிகாரிகளுக்கு, அரச ஊழியர்களுக்கு மற்றும் வேறு எவரேனும் நபர்களுக்கு அவர்களின் தொழில்சார் அல்லது வேலை சம்பந்தமான பாடவிடயங்கள் சார்ந்த முதனிலைப் பட்டப்படிப்புக்கான தயார்படுத்தலின் போது அறிவியல்சார் கற்கைகளுக்கான வசதிகளையும் போதனைகளையும் வழங்குதல்.

.    இராணுவ, கடற்படை மற்றும் வான்படை ஆகியவற்றினது படை அலுவலர்களின் சேவைக் காலப்பகுதியில் கூட்டு நடவடிக்கைகளில் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்திற்காக படை உத்தியோகத்தர்களிடையே “ஒன்றுபட்ட” தன்மையையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்காக பயிலிளவல் அலுவலர்களிடையே நட்பு மற்றும் ஒற்றுமை சார்ந்த உணர்வுகளை வளர்ச்சியடையச் செய்தல்.

ஈ.  ஆயுதப் படைகளின் அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவ சபையால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய ஆட்களுக்கு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பட்டப் பின்படிப்புப் பட்டம், பட்டதாரிப் பட்டம், திப்ளோமா மற்றும் ஏனைய சான்றிதழ்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள தகுதிபெறுவதற்காக அவர்களுக்கு தொடர்ச்சியான தொழில்வாண்மை வளர்ச்சி சார்ந்த பாடநெறிகளை வழங்குதல்.

உ.    பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தினால் தேவையெனக் கருதப்படும் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்திகள் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளை நிறைவேற்றுதல்.